ஜூலை 18, 2012

காலையும் மாலையும் துதித்தல் நன்று


-துவாரகன்

உன் பேச்சு நன்று
உன் பாடல் நன்று
உன் நினைவு நன்று
உன் வரவு மிக நன்று
நீ வாழ்க்கை தந்தாய். வாழ்க!

இந்த மனிதர்கள் பொல்லாதவர்கள்
இரக்கம் இல்லாதவர்கள்
குற்றம் சொல்பவர்கள்
உன் அருமை புரிவதேயில்லை

நீயே என் வாழ்வு
நீயே என் வழிகாட்டி
உனக்காகவே என் காலங்கள்
எனக்கு வேறு என்ன வேலையிருக்கிறது

கொஞ்சம் பொறுக்கிறீர்களா?
காலைக்கடன் முடித்துவிட்டு வருகிறேன்.
07/2012
---

7 கருத்துகள்:

 1. துவாரகன்.
  வணக்கம்.
  கவிதைகள் எமக்குள் கனக்கிறது.புலம் பெயர்ந்துவிட்டதால் எமது உணர்வுகள் மடிந்துவிடவில்லை.காலையை,மாலையை அவை தந்த சுகங்களை,சோகங்களை ரசிக்கவும் முடிகிறது.மீண்டும் மீண்டும் இதயம் கீறப்படுகின்ற பொழுதுகள் தான்.இடம் பொருட்டல்ல.வாழ்வு ஒன்றுதான்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. நன்றி முல்லை அமுதன். உங்கள் கருத்துக்கள் தொடர்ந்தும் எழுத ஊக்குவிக்கிறது.

  பதிலளிநீக்கு
 3. l wasweem akram akram padihal@yahoo.com

  8:36 AM (1 hour ago)

  to me
  புதுமை. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. நண்பரே கவிதை பார்த்தேன் .ஒரு முரண் சுவை யை அனுபவித்தேன் .நல்லது தொடருங்கள். நந்தினிசேவியர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நந்தினி சேவியர் அவர்களுக்கு மிக்க நன்றி.

   நீக்கு
 5. இந்த மனிதர்கள் பொல்லாதவர்கள்
  இரக்கம் இல்லாதவர்கள்
  குற்றம் சொல்பவர்கள்
  உன் அருமை புரிவதேயில்லை//சோகங்களை ரசிக்கவும் முடிகிறது

  பதிலளிநீக்கு
 6. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாலதி.

  பதிலளிநீக்கு