கனவில் வந்த கடவுள்
-துவாரகன்
ஒரு நாள் என் கனவில் கடவுள் வந்தார்
தான் யார் என்று கேட்டார்
கடவுள் என்றேன்
எல்லாம் அறிந்தவர்
எங்கும் நிறைந்தவர்
எல்லோரையும் காப்பவர்
அவரே கடவுள் என்றேன்
ஆனாலும் கடவுள் மிகக் கவலைப்பட்டார்
என்னவென்று கேட்டபோது
தான் நன்றாக இல்லை என்றார்.
கடவுள் நீண்ட நேரம் சிந்திக்கிறார்
கடவுள் நீண்ட நேரம் விடுப்புக் கதைக்கிறார்
இதனால்த்தான்
கடவுள் நன்றாக இல்லையென்பதைப்
புரிந்துகொண்டேன்
ஒளிவட்டம் கொண்ட
ஞானிகள் போல் கடவுளும் இருக்கவேண்டும்
இல்லாவிடில் இரணியன் வந்துவிடுவானே?
இப்போ நானும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்
இரவில் மின்னுகின்ற
மின்மினிப் பூச்சிகளையும்
நட்சத்திரங்களையும் பார்த்துக்கொண்டே
180120112212
நன்றி - திண்ணை/வார்ப்பு/காற்றுவெளி
aruami.. vaalththukkal
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி சரவணன்
பதிலளிநீக்குநண்பரே தங்கள் கருத்துக்கு நன்றி
பதிலளிநீக்குவல்லை வெளி நன்றாக உள்ளது
கவிதைகள் அருமை
http://tamilaaran.blogspot.com/
எனது 'புகலிட இலக்கியமும் பண்பாடும்' கட்டுரையையும் தமிழாரத்தில் இட்டுள்ளமை கண்டேன். அதற்கும் சேர்த்து மிக்க நன்றி நிதர்சன்
பதிலளிநீக்குநண்பா! கடவுள் உண்மையிலேயே நன்றாக இல்லைத்தான்.
பதிலளிநீக்குஅது சரிபோல்தான் எனக்கும் படுகிறது. வரவுக்கு நன்றி சரவணன்.
பதிலளிநீக்குஅதுசரி ஏன் உங்கள் வலைப்பதிவுக்கு 'அழுவம்' என்ற பெயர். மாற்றுவது பற்றி யோசிக்கலாமே!