செப்டம்பர் 30, 2012

வாழ்வோம்


வாழ்வோம் வாழ்வோம் வாழ்வோம்
இன்னும் நாங்கள் வாழ்வோம். 
வாழ்வின் சுமையைத் தூக்கி
சுகமாய் நாங்கள் இன்னும் வாழ்வோம்.
                 (வாழ்வோம்…)

உலகில் பூக்கும் கொடியும்
உரமாய்ப் பற்றிப் பிடித்தே வாழும்.
சுற்றி இருப்போர் உறவாய்
சுமையைப் பகிர என்றும் வாழ்வோம்.
                (வாழ்வோம்…)

வானம் பார்க்கும் நிலமும்
மண்ணில் பொழியும் மழையின் நீரும்
பின்னிப் பிணைந்தது போலே
மனமும் திடமும் உரமும் கொள்வோம்.
                  (வாழ்வோம்…)

உழைப்பு உறுதி உயர
உன்னத வாழ்வு கைகளில் சிக்கும்.
களைப்பு நீங்கி வாழ்வோம் - நம்
கரங்களை இன்றே ஒன்றாய் சேர்ப்போம்.
                  (வாழ்வோம்…)


பாடலைக்கேட்க அழுத்தவும் 

(ஊனமுற்றோர் சம்பந்தமான நிகழ்வு ஒன்றுக்காக எழுதப்பட்ட பாடல். இதற்கு கந்தப்பு ஜெயந்தன் இசையமைத்திருக்கிறார். பாடியவர் ரெஜிகுமார்.)