ஜூன் 04, 2011

தீராக்காதலியின் வினாக்கள்-துவாரகன்

என் உதட்டுச்சாயம் பற்றியும்
கன்னத்தில் விழுந்து தழுவிக் கொண்டிருக்கும்
கூந்தல்அழகு பற்றியும்
நீ ஏன் இப்போது பேசுகிறாய் இல்லை

என் அன்பும்
தீராக்காதலும்
ஏன் உன்னிடம் தோற்றுப்போகின்றன

என் நகப்பூச்சுக்கே
நாளும் புகழ்ந்து தள்ளும் நீ
நான் பேசும்போதெல்லாம்
வானத்தையும் பூமியையும் பார்த்து
ஏதேதோ பிதற்றுகிறாய்

தீராக்காதலி
அடுக்கடுக்காக
மீளவும் கேட்கத் தொடங்கிவிட்டாள்.

ஜோடிப்புறாக்கள் கொஞ்சிப்பேசும்
அழகுடன் கூடிய
பரிசுப்பொருளுடன்
பேச முடிவுசெய்துவிட்டேன்.

அவளின் கேள்விக் கணைகள்
முழுதாக என்னை மூடும்முன்னே!
06/2011
நன்றி - பதிவுகள்,காற்றுவெளி,யாதும்

6 கருத்துகள்:

 1. பரிசுப் பொருள்களால்
  தாஜா பண்ணக் கூடிய காதலி....?

  பதிலளிநீக்கு
 2. இந்தக் கவிதையில் கவிஞர் அப்படித்தான் சொல்கிறார்போலும். நன்றி டொக்டர்.

  பதிலளிநீக்கு
 3. வருகைக்கு மிக்க நன்றி ம.தி சுதா

  பதிலளிநீக்கு