ஜூன் 17, 2011

சொற்கள்போல் ஒளியை விழுங்குதல்



-துவாரகன்

இருட்காட்டில் ஒளியைக் கண்டுகொண்டவன்
அதைச் சொற்கள் போல் விழுங்கிவிட்டான்.
சொல்… விழுங்கினால் திக்கும்.
யாருக்கும் எதுவும் புரியாது.

வேடதாரி ஒளியை விழுங்கினான்.
அது தொண்டைக்குழியில்
மீன்முள் போல் சிக்கிக்கொண்டது.

பாட்டன் சொன்ன கதைகள் போல்
கனவுகண்டான்
ஒளி உமிழ்நீரில் கரைந்துவிடும் என்று.
ஒளி இரைப்பையில் சமிபாடடையும் என்று.
குருடன் அடித்த கதையாய் காத்திருந்தான்
ஒளி அசைவற்றுக் கட்டியாகியது.

இன்னமும்
ஆட்டுக்குட்டியை விழுங்கிய
வெங்கடாந்திப் பாம்புடல்போல்
துருத்திக் கொண்டிருக்கிறது ஒளி
06/2011

6 கருத்துகள்:

  1. அழகான கவிதை சொல் இல்லாத விக்கல் விழுங்கிய வார்த்தைகள் எத்தனை ஒளிகள் மிகவும் கோர்த்த வார்த்தை ஜாலங்கள் நண்பரே!

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கு மிக்க நன்றி நேசன்.

    பதிலளிநீக்கு
  3. ஒளி ஒடுங்கிக் கட்டியாகி
    உயரடங்கச் செய்யும்
    போலி ஜன்மங்கள்.

    சிந்திக்கப் புதிது புதிதாக
    சிறகடித்துப் பறக்க வைக்கும் வரிகள்.

    பதிலளிநீக்கு
  4. நல்ல கவிதை பல தளங்களுக்கும் வாசிப்புக்கும் உரியது வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி டொக்டர்.

    பதிலளிநீக்கு