மார்ச் 16, 2011

கைகளிருந்தால்…


-துவாரகன்

எமக்குக் கைகளிருந்தால்
ஒருவரைக் கன்னத்தில் அறையலாம்
தடியால் அடிக்கலாம்
சுட்டுவிரலால் அதிகாரம் செய்யலாம்
இன்னும் எதுவும் செய்யலாம்

எமக்குக் கைகளிருந்தால்
ஓடிவரும் குழந்தையை அள்ளி அணைக்கலாம்
வீதியில் விழுந்தவரைத் தூக்கி விடலாம்
நட்புடன் பற்றிக்கொள்ளலாம்
நாலுபேருக்கு உதவலாம்
நாட்டைக் கட்டியெழுப்பலாம்

கைகளில்லாவிடில்
எல்லாவற்றுக்கும் எல்லாநேரமும்
யாரையும் எதிர்பார்க்கக்கூடும்

ஒரு பயணத்தில்
கையிரண்டும் இல்லாமல்
மிகப் பிரயத்தனப்பட்டாள் அவள்.
ஆனாலும்
அவள் சிரித்தாள்
நட்போடு உரையாடினாள்

மனிதராயிருக்கிற மனிதருக்கு மத்தியில்
இன்னமும் மனிதர்கள் இருக்கிறார்கள்.
ஆதலால்
அவள் உயிரோயிருக்கிறாள்.
03/2011
நன்றி : திண்ணை/காற்றுவெளி/பதிவுகள்
---
குறிப்பு - இந்தக் கவிதைக்குரிய பெண்ணை 29.07.2011 newjaffna.comஎன்ற இணையத்தள செய்தி ஒன்றின்மூலம் தற்செயலாக மீளவும் அறிய முடிந்தது. இதற்குள் பெரிய கதையே இருக்கிறது. கீழே உள்ள லிங்கின் ஊடாக சென்று பாருங்கள். நாங்கள் என்ன பங்களிப்புச் செய்யலாம் என்பது பற்றி யோசிக்கலாம்.http://newjaffna.com/fullview.php?id=NDc5OA==3 கருத்துகள்:

 1. facebook நண்பர்கள் கூறியவை

  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan
  மனிதம் அவளில் ஊனப்படவில்லை.
  8 hours ago · Like · 1 person

  Sanjayan Selvamanickam
  மனிதராயிருக்கிற மனிதருக்கு மத்தியில் இன்னமும் மனிதர்கள் இருக்கிறார்கள். .. என்பது எவ்வளவு உண்மை
  3 hours ago · Like · 2 people

  பதிலளிநீக்கு
 2. Vathiri C Raveendran மனிதர்கள் மனிதர்களாக இருந்தால் மகிழ்வாகலாம்.
  9 hours ago · Unlike · 1 person

  Subramaniam Kuneswaran நன்றி அண்ணா. உங்களது நேர்காணல் 'வசந்தம்' தொலைக்காட்சியில் நேற்று பார்க்கக் கிடைத்தது. வாழ்த்துக்கள்.
  4 minutes ago · Like

  பதிலளிநீக்கு