முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

இது யாருடைய வீடு

  - துவாரகன் நினைவோரத்தில் தேங்கிய கனவுகளைத் தூக்கிச் செல்கிறான். வளையம் உருட்டிவிளையாடிய ஒழுங்கை கலங்கலாயிருக்கிறது. புதிய பாதைகள் முளைத்திருக்கின்றன. சிதைந்த வீடுகளைப்போல் முதியமுகங்களில் ஓவியத்தின் ரேகைகள். சந்தையின் இரைச்சலும் சின்னக்கால்களால் நடந்த ஆரம்பப்பள்ளியும் தரவையும் கோயில்பொங்கலும் கடல்மீனாகத் துள்ளியெழுகின்றன. ஐந்து தோடம்பழ மிட்டாய்களை நீண்டநேரம் உள்ளங்கையில் பொத்திவைத்த ஈரலிப்பு. தொலைந்துபோன காலங்களின் குளிர்மை நெஞ்சை நிறைக்கிறது. பாதை மருங்கில் அலங்கோலமாகக் கிடந்த வேலியின் ஊடே ஒரு வேற்றுமனிதனைப்போல அந்த வீட்டைப் பார்க்கிறான். 'வீட்டுக்கு முன்னால மதில் இருந்ததென்று அக்கா சொன்னவா!' வார்த்தைகள் குமிழிடுகின்றன. மோட்டார் சைக்கிளில் ஏறிக்கொண்டே சொல்கிறான். 'இது எங்கட வீடுதானோ?' நினைவு, கையிலிருந்து வீழ்ந்த கண்ணாடியாகச் சிதறுகிறது. 01062023

கதிரையதிகாரம்

- துவாரகன் அதிகாரம் என்ன செய்யும்? மண்டியிட வைக்கும் மானிடத்தைக் கொல்லும் அதிகாரம் என்ன செய்யும்? குதிக்கால் உயர்த்திப் பேசும் சுட்டுவிரல் காட்டி அடக்கும் சாட்டையின் கைமாற்றம் நுகத்தடியில் மாட்டப்படும் தோள்களுக்கு வானவில் வண்ணத்தைத் தரப்போவதில்லை. வானத்தில் பறந்துகொண்டிருக்கும் காக்கையை ஆராய்ந்துகொண்டு நூறுபேர் நிற்கிறார்கள். நூற்றியோராவது ஆளுக்காக சன்னதங் கொள்கிறது கதிரையதிகாரம். www.geotamil.com

துரோகத்தின் நாவுகள்

  - துவாரகன் துரோகத்தின் நாவுகள் மண்ணில் ஊன்றிய வேர்களைப்போல் மறைந்துள்ளன. காற்றுக் கைகளை நீட்டி தாயென முலைதந்து தாலாட்டிய நல்மரங்களென எண்ணியிருந்தோம். நச்சுமரமாகித் துரத்துகின்றன. துரோகத்தின் நாவுகள்தான் சிலுவை சுமக்க வைக்கின்றன. உணர்வைக் கொல்கின்றன. சந்தனக் குழம்பு பூசி நறுமண வார்த்தைகளோடு உலாவும் நாவுகளிலிருந்து நினைவே நீ விலகிவிடு. மறதியே நீ வாழ்ந்துவிடு. வேர்களை அறுத்துக்கொண்டு காற்றில் மிதக்க ஆசைப்படுகிறது வெள்ளந்தி மனசு. vanakkamlondon.com

சுண்டெலிகள் பெருகிவிட்டன

- துவாரகன் இந்தச் சுண்டெலிகளுக்கு  பள்ளிகளும் இல்லை ஆசிரியர்களும் இல்லை.  அவற்றுக்குத் தெரிந்ததெல்லாம்  கருவாட்டு வாசனையும்  தேங்காய்ச் சொட்டுக்களும்தான். வீட்டு முகடுகளில்  விளையாடித் திரிந்த எலிகள்  இப்போது தரையில் இறங்கி  நடனமாடத் தொடங்கிவிட்டன.  பூனைகள், எலி பிடிப்பதை மறந்துவிட்டு  நடனத்தை ரசிக்கின்றன.  வேறுவழியில்லை! இனி நாங்களும்  கைதட்டி உற்சாகப்படுத்தவேண்டும். இல்லையெனில்  எலிப்பொறிகளில்  எங்களை மாட்டிக் கொள்ளவேண்டும்.  26012023

பூஞ்சை

  துவாரகன் பூஞ்சை பிடித்த இந்தக் கன்றுகளுக்குத்தான் இன்னமும் நீரூற்றிக் கொண்டிருக்கிறோம். எருக்குவியல் கலந்த வளமான மண். ஊற்றுநீரோடி ஊறிய நிலம். வீரியமான விதைகளைத்தானே மண்ணில் ஊன்றினோம். இந்த நோய்க்காவிகள் எங்கிருந்துதான் முளைத்தனவோ? பூஞ்சை பிடித்த பாகற்காய் பூச்சி பிடித்த பயற்றங்கொடி வேராகிய மரவள்ளிக்கிழங்கு ஒரு கறி வைப்பதற்குக்கூட முருங்கையிலை ஒடிக்கமுடியாது மொய்த்துக் கிடக்கின்றன மயிர்க்கொட்டிகள். 09022023

துவாரகனின் 'காலத்தின் ரேகை' கவிதை சிங்களத்தில்

இப்னு அஸூமத் அவர்கள் சிங்கள மொழிக்கு அறிமுகப்படுத்தும் (மொ.பெ) எனது ஏழாவது கவிதை 'காலத்தின் ரேகை'. Ibnu Asumath அவர்களுக்கு அன்பும் நன்றியும். - துவாரகன் தமிழ் மூலக்கவிதை இணைப்பு : காலத்தின் ரேகை - துவாரகன் சிங்கள மொழிபெயர்ப்பு இணைப்பு :  කාලයේ රේඛාව කාලයේ රේඛාව ------------------ වෙහෙස අහුරා ඉසන වැහි බීරුමයකි මිනිස් හඬ නොමැති පරතරය පුරවන ගුවන් විදුලිය කකුලේ අතුල්ලමින් සිටි බළලා ද වලිගය අකුලමින් සිටි සුනඛයා ද රවුමක් ගිහින්ය දෙමළිච්චන් පමණක් චතුරශ් ‍ ර මිදුලේ කුතුහලයෙන් හැඟීම් නැති කර ගත් කලාමැදිරියන් පසුපස මිනිස්සුන්ද ගිහින්ය ක`ඵවර හා ආලෝකය එක්වූ ජීවිතයෙහි ඇස් පිය ගසන එළිය ඇයව සනසන්නේ නොමැත නම කියා කැඳවන හඬක් වෙනුවෙන් එම මොහොත ගෙවී යමින්ය අපිරිසිදු මේසය මත දකුණු අත තබා ඈ ක`ඵවර දෙස කුලෑටිව බලමින්ය යම් පාද හඬක් අදිසියෙන් ඇස් කණ්ණාඩිය ගෙන පලදින්නේය සැරසටිය සොයාගන්නේය හුදකලාව ඇගේ පාද යට ඇකිළී තිබෙන්නට කාලය තම රේඛාවන් අහුරා ඉසමින් යමින්ය සිය පාඩුවේ තුවාරකන් පරිවර්තනය - ඉබ්නු අසූමත් The line of time ------------------ A rainfall that is sprayed by tiredness The gap without human voi...

பூங்குருவிகள்

துவாரகன் பூங்குருவிகள் இப்போ சோலைகளுக்கு வருவதில்லை. நீரோடும் வாய்க்காலில் சிறகுலர்த்துவதில்லை. பறவைகளில் நீங்கள்தான் இனிமையாகப் பாடக்கூடியவர்கள் யாரோ கதையடித்து விட்டார்கள். அன்றிலிருந்து மண்டை வீங்கிய மனிதர்களாகிவிட்டன பூங்குருவிகள்.   உறவுகளைக் கொத்திக் கலைத்தன. கீச்சிடும் பறவைகளை அதட்டின. குழந்தைகளைத் துரத்திக் கொத்தின. வீதியில் வழிப்பறி செய்தன. வெற்றிலைத் துப்பலையும் கெட்ட வார்த்தைகளையும் கழித்துக் கொட்டும் மனிதர்கள்போல் கண்ட இடமெல்லாம் எச்சமிட்டன. வலதுபுறம் சமிக்ஞைகாட்டிவிட்டு இடதுபுறம் திரும்பின.   இனி அந்த வயல்வெளியில் சிறகுலர்த்தும் அழகு இல்லை. இனிமை ததும்பும் மென்குரல் இல்லை.   பூங்குருவிகளும் மனிதர்களைப் போலவே துரோகமும் ஏமாற்றுவித்தையும் கற்றுக் கொண்டனபோலும். நன்றி : வகவம், கவிதை இதழ் 2 2022/10