முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மிட்டாய் வியாபாரியின் குதிரையேற்றம்

  துவாரகன்   புதிய குதிரையில் சிட்டாய்ப் பறந்த மிட்டாய் வியாபாரி உடம்பெல்லாம் சிரிப்பாக நின்றான்.   மிட்டாய்ச் சுவைக்கு மயங்கி குதிரை கொடுத்தவன் குத்திட்ட மயிர்த்துளைகளுடன் குதித்துக் கொண்டிருந்தான்.   பேரத்தின் இறுதியில் கடையும் குதிரையும் கைமாறின.   ஒருநாள் குதிரை திரும்பியே விட்டது.                 கையறுநிலையில் கடைக்காரன்.   சாபம்பெற்ற இந்திரனின் கண்களை மிட்டாய்க் காரனும் குதிரைக்காரனும் இனிப்பாலும் சிரிப்பாலும் மூடியபடி கடந்து கொண்டிருக்கின்றனர். 2021

வெள்ளெலிகளுடன் வாழ்தல் பற்றி

எனது கவிதையான "வெள்ளெலிகளுடன் வாழ்தல்" தொடர்பான இரசனைக் குறிப்பை மா. பா. மகாலிங்கசிவம் அவர்கள் எழுதியுள்ளார். தெளிவாக நூலகம் இணைப்பில் வாசிக்கலாம்.  வெள்ளெலிகளுடன் வாழ்தல் - துவாரகன் கவிதை நன்றி : உதயன் மற்றும் மா. பா. மகாலிங்கசிவம் 

குருகுலம் மாணவருக்கான கல்வி நிகழ்ச்சியில்

 குருகுலம் மாணவருக்கான கல்வி நிகழ்ச்சியில்  (ரூபவாகினி  & ஐ அலைவரிசை) எனது மூன்றாவது காணொளி  https://www.youtube.com/watch?v=SyjC0EtV0m0&t=368s முன்னைய காணொளிகள்  தரம் 6 குறும்பா தரம் 9 சகுந்தலை

வ. அ. இராசரத்தினம் படைப்புகள் மீதான உரை

  தொடர்புடைய காணொளி  https://www.youtube.com/watch?v=IozcMpzZrpI&t=3008s நிகழ்வின் உரை முழுவதையும் கேட்க https://www.facebook.com/100000000176167/videos/4355903544419608/

வெளியார் பாடல்

துவாரகன்  ஐயா தர்மவான்களே! நாங்கள் தினமும் காலையில் நீராடுகிறோம்.  மூன்று வேளையும் கைகால் அலம்புகிறோம்.  கைநகங்களையும் சுத்தமாக்கி வைத்திருக்கிறோம்.  காலையில் உங்களைப் போலத்தான் குந்தி எழும்புகிறோம். தினமும் உடைகளை மாற்றுகிறோம். மூன்று வேளையும் உண்கிறோம்.  நீராகாரமும் பருகுகிறோம்.  வீதியிலும் கைகளை வீசி  இரண்டு கால்களாலும் நடக்கிறோம்.  நீங்கள் சுவாசிக்கும் காற்றைத்தான்  நாங்களும் சுவாசிக்கிறோம். வைத்தியரும்கூட எங்கள் உடலில் ஓடுவது  சிவப்பு இரத்தம் என்றுதான் சொன்னார்.  அப்படியிருக்கும்போது… நாங்களும் மனிதர்கள்தானே! நன்றி : கனவு 2021

நாற்றத்தின் கொண்டாட்டம்

               துவாரகன்   ஒரு பூனையின் கால்களுக்கிடையே அகப்பட்ட சுண்டெலியின் ஈனமான கீச்சிடல் காதில் ஒலிக்கிறது.   வருந்தி உழைப்பதும் விற்றுப் பிழைப்பதும் ஒன்றென உன் மாயக்கண்ணாடி அறிவு உனக்குச் சொல்லியிருக்கலாம்.   மலக்குழி வெடிப்பினூடாக வெளியேறும் நாற்றம்போல் நடந்து வந்த பாதை. இனி நறுமணத்தைப் பூசிக்கொண்டே நாங்கள் உரையாடவேண்டியிருக்கிறது.   நாற்றம் உனக்கானது. உன்னோடு வாழக்கூடியது. எதிர்காலமும் நாற்றத்தையே புனிதமாகக் கட்டமைக்கும். அப்போதும் உன்பாடு கொண்டாட்டம்தான். தீம்புனல் 2021.05.08

“மண்ணில் மலர்ந்தவை” இலக்கியக் கட்டுரைகள் - ஒரு பார்வை

-  பா. இரகுவரன்    சு. குணேஸ்வரன் எழுதிய “மண்ணில் மலர்ந்தவை” என்ற நூல் அண்மையில் கிடைக்கப் பெற்றேன். முன்அட்டைப்படமாக தொண்டைமானாற்றின் அருகாமையில் மரபுரிமைச் சின்னமாக அமைந்திருக்கும் கரும்பாவளிக்கேணி  மிக அழகாக அச்சில் பதிவாக்கப்பட்டிருக்கின்றது. யாழ்ப்பாணம் Book Lab இன் வெளியீடாக வந்துள்ள இந்த நூலை, யாழ்ப்பாணம் “குரு பிறின்டேர்ஸ்” மிகச் சிறப்பாக அச்சாக்கம் செய்துள்ளது.    சமூக முன்னோடி ஓய்வுபெற்ற அதிபர் திரு செ. சதானந்தன் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ள இந்நூலில், சிறுகதை பற்றிய இரண்டு கட்டுரைகளும் நாவல் பற்றிய மூன்று கட்டுரைகளும் கவிதைத் தொகுதிகள் பற்றிய ஆறு கட்டுரைகளும் “கரும்பாவாளி” ஆவணப்படம்  மற்றும் “ஆஸ்திரேலியவில் தமிழ் கற்பித்தல்” ஆகிய கட்டுரைகளுடன் கலை இலக்கிய ஆளுமைகளான கவிஞர் மு. செல்லையா , வே. ஐ வரதராஜன், கண. மகேஸ்வரன், நந்தினி சேவியர், பேராசிரியர் செ. யோகராசா ஆகியோர் பற்றிய ஐந்து கட்டுரைகளுமாக மொத்தம் பதினெட்டுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து வாசிக்க :  https://sevvarathai-aachchi.blogspot.com/2021/01/blog-post.html