முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கிரகவாசியும் ஆதிவாசியும்

- துவாரகன் நெஞ்சடைத்து வரும் ஆற்றாமை வாய் திறந்து அழுதால் தீருமோ? கல்லோடு கட்டிக் கடலில் போட்ட கதையாக அச்சமும் அவலமும் எப்படி ஒன்றாய்ச் சேர்ந்தன? தந்திரமா தன்வினைப்பயனா வரலாறா தமக்குள் கேட்கிறார்கள். எல்லாம் மாயை ஒரு சித்தனும் கூறுவான் பிரபஞ்சம் அறிந்து விரிந்தபோது மானிட வாழ்வு மட்டும் எப்படிப் பூச்சியமானது? பறித்துப் பிரித்தெடுத்து முழுவதும் விழுங்கும் குரங்குபோல் வந்த தூதர்களின் மூச்சொலி இன்னமும் கேட்கிறது. வழக்காட முடியாத தமிழ்ச்சாதியோ? என்றான் ஒரு கவிஞன். பிரபஞ்சத்தின் வெற்றியில் தூசாக அடிபட்டுப் போன மானிட ஜாதி இதுதானா? வேரெது குரலெது மரத்தடிப் பிச்சைக்காரன்போல் கேட்டுக் கொண்டேயிரு! தட்டில் மட்டும் அப்பப்போ சில சில்லறைகள் மட்டும் விழக்கூடும். 231220101038

சபிக்கப்பட்ட உலகு -1

-துவாரகன்- மீளவும் பூச்சிகளும் பறவைகளும் வாழும் உலகு எனக்காகச் சபிக்கப்பட்டிருக்கிறது எப்போதாவது ஒருமுறை வரும் வாகனத்தில் ஒரு பயணத்திற்காகக் காத்திருத்தல் வழமையாயிற்று எத்தனை முறைதான் இப்படிச் சறுக்கி விழுவது? அதிகமாக எல்லா அதிகார வர்க்கத்திற்கும் மூளைப் பிசகு ஏற்பட்டிருக்க வேண்டும்? சீறிவரும் வாகனத்தில் இருந்து கண்ணாடிக் கதவு இறக்கி சுட்டுவிரல் காட்டவும் லாபத்தில் பங்குபோடவும் நேரம் குறித்து வருவார்கள். கூடவே முதுகு சொறிய கொஞ்சம் ஒட்டியிருக்கும். பூச்சிகளும் பறவைகளும் மிருகங்களுமே வாழக்கூடிய வனவாசகத்தில் பட்டரும் ஏசியும் நெற்வேர்க்கும் பயன்படுத்தலாம் என ஆலோசனை கூறுகிறார்கள் மூளைகெட்டவர்கள் மூன்று மணித்தியாலமாக யாரோ ஒரு நல்லவனின் வருகைக்காக பாசிபிடித்த மதகு ஒன்றில் குந்தியிருக்கிறேன் வீதியை வெறிப்பதும் குரங்குகளின் ஊஞ்சலை ரசிப்பதும் பறவைகளின் கீச்சிடலும் பழக்கமாயிற்று மழைபெய்து ஈரமாக்கிய கிரவல் மண்ணில் மண்புழுக்கள் நெளிவதையும் வாரடித்து ஓடிக்கொண்டிருக்கும் நீரில் தத்தளித்துக் கொண்டிருக்கும் எறும்புகளையும் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன் இந்த உலகில் வாழச் சபிக்கப...

காடு

-துவாரகன்- அற்புதங்களையும் ரகஷ்யங்களையும் மறைத்து வைத்திருக்கும் அழகிய உலகம் பொய்யும் கபடமும் இந்தக் காடுகளிடம் இல்லை சிறகுவிரித்து நுழைய நுழைய தன் கரம் நீட்டிக் காப்பாற்றும். இயற்கையிலும் வாழ்க்கையிலும் மோகம் கொண்ட மனிதன் காடுகளைக் கண்டடைந்தான். பசியோடு வந்தவனுக்குப் பரிமாறியது காடு ஜீவராசிகளின் சரணாலயம் ஆகியது காடு உயிர்த்தாதுக்களின் உற்பத்தி மையம் ஆகியது காடு காடுகளில்தான் மனிதன் வேட்டையாடக் கற்றுக் கொண்டான் காடுகளில்தான் மனிதன் போராடக் கற்றுக் கொண்டான் காடுகளில் இருந்துதான் மனிதன் நாடுகளைப் பிடித்தான். வீரர்களைக் காக்கும் விரிந்த உலகானது காடு. நாகரீக மனிதனோ, காட்டில் இருந்து வந்தவனை நாடோடி என்றான். காட்டைச் சூழ்ச்சிகளின் கூடாரமாக்கினான். ஆனாலும், காடுகளே அற்புதங்கள் காடுகளே ரகஷ்யங்களின் பொக்கிஷங்கள் காடுகளே விடுதலையின் வெற்றிகள் 051220100655

யானெவன் செய்கோ?

-துவாரகன்- அந்தகாரத்தில் ஒலித்து ஓய்ந்துபோன அந்த ஈன ஒலி காற்றில் கலந்து கரைந்து போனது. மெல்ல மெல்ல மண்ணிலிருந்து எழுந்து மரங்களில் தெறித்து வானத்தில் சென்றடங்கிப் போனது. எது சாட்சி? ஒரு மரம் ஓணான், காகம் குருவி இன்னும் நான்கு சுவர்களும் பல்லிகளும் சாட்சி. அந்த வேப்பமர ஊஞ்சல் அவள் காற்றில் கூந்தல் விரித்த கணங்களையும் இழந்து விட்டது. சுவருக்கும் பல்லிக்கும் மரத்துக்கும் ஓணானுக்கும் கடவுள் பேசும் வரம் கொடுத்தால், கட்டுண்ட வெளியில் இருந்து புதையுண்ட மண்ணில் இருந்து மூடுண்ட அறையுள் இருந்து இன்னும் கதைகள் பிறக்கும். அன்று இசைவோடு ஏமாந்தாள் குருகு சாட்சியாக. இன்று அந்தகாரத்தில் அடங்கிப் போனாள் பல்லியும் ஓணானும் சாட்சியாக. 171120101150 நன்றி- காற்றுவெளி (மின்னிதழ் டிசம்பர்)

பாம்புகளுக்கு குழந்தைகள் மீது கருணை பிறந்த கதை

- துவாரகன் - பாறாங்கற்களிலும் தாழைமரங்களிலும் தம்மை மறைத்துக் கொண்டிருந்த பாம்புகளுக்கு இப்போ செட்டை கழற்றும் வயசாச்சு. கண்டவர் அஞ்சும் கோலங்கள் இட்ட தம் செட்டையை குழந்தைகளுடன் குதூகலிக்கும் ஆசையில் கழற்றிக் கொண்டிருக்கின்றன. பஞ்சுமிட்டாய்க்காரன் போலவும் பலூன்காரன் போலவும் பபூன் போலவும் குழந்தைகளுக்கு ஆசையூட்டிக் கொண்டிருக்கின்றன. இந்தப் பாம்புகள்தான் எங்கள் வீடுகளில் நுழைந்து குழந்தைகளைப் பயமுறுத்தியவை. இந்தப் பாம்புகள்தான் எங்கள் குழந்தைகளை நித்திரையில் தீண்டிவிட்டுப் போனவை. இந்தப் பாம்புகள்தான் பிள்ளைகளின் பாற்கலயத்தில் விசத்தைக் கக்கிவிட்டுப் போனவை. இடறி வீழ்ந்துகிடந்த எங்கள் பிள்ளைகளை ஓர்ஆட்டுக்குட்டியைப்போல் இறுக்கி முறித்துக் கொன்றவையும் இவைதான். கொடிய விசத்தை இரட்டை நாவுக்குள் மறைத்து கொண்டு இராட்டினத்தில் ஏறி குழந்தைகளுடன் விளையாட ஆசைப்படும் பாம்புகளுக்கு இப்போ மட்டும் இந்தக் கருணை எங்கிருந்து பிறந்ததாம்? குழந்தைகள் பாவம் அவர்களை விளையாட விட்ட தாய்மாரும் ஏதுமறியார் கபடதாரிப் பாம்புகளே இனியாவது கொஞ்சம் விலகியிருங்கள். 1...

அப்போது வானம் எவ்வளவு அழகாக இருந்தது

- துவாரகன் என் அம்மம்மாவின் உலகத்தில் வானம் எவ்வளவு அழகாக இருந்தது. முற்றத்தில் இருத்தி திரளைச்சோறு குழைத்துத் தந்த ஞாபகம். எப்போதும் ஒரு நார்க்கடகத்துடன் நடந்து வருவாள். கறிக்குக் கீரை சாப்பிடப் பழங்கள் மடியில் எங்களுக்காக ஒளித்துக்கொண்டு வந்த பணியாரங்கள். முதல்நாள் இருமியதைக் கண்டு மொசுமொசுக்கையுடன் ‘உறெட்டி’யும் தட்டித் தருவாள் தோடம்பழ மிட்டாய் அவளுக்கு மிகப் பிடிக்கும் தங்கை ‘புஸ்பா’வின் பெயர் அவள் வாயில் வராதெனத் தெரிந்தும் சகோதரர் நாம், சொல்லுமாறு அடம்பிடிப்போம் சாதிச்செருக்கின் மிச்ச வடுக்களையும் தன் குறுக்குக்கட்டில் தழும்புகளாய்ச் சுமந்து கொண்டிருந்தாள். எண்பத்தேழில் எங்கள் வீடெரித்தவனும் அதன் பின் தலைப்பாகையுடன் வந்தவனும் எங்கள் கூடுகளைச் சிதைத்துவிட்டுச் சென்றார்கள் தோட்டம்… வீடு… ஆடு…மாடு… பேரப்பிள்ளைகள் என்ற உலகத்தில் வாழ்ந்த அந்த ஜீவன்கள் நோயுடன் நினைந்து நினைந்து செத்துப் போயினர். ஞாபகமாய் இருந்த ஒரேயொரு அடையாள அட்டைப் படத்தையும் பெருப்பிப்பதற்காக ஒரு ஸ்ருடியோவில் கொடுத்து வைத்திருந்தேன். திரும்பியபே...

வெள்ளாடுகளின் பயணம்

-துவாரகன் ஆட்டுக் கட்டையை விட்டு எல்லா வெள்ளாடுகளும் வெளியேறி விட்டன. கண்ட இடமெல்லாம் வாய்வைக்கும் என்று என் அம்மா ஒரு போதும் வெள்ளாடுகளை வாங்கி வளர்ப்பதில்லை. இப்போ அவை பட்டுப்பீதாம்பரம் போர்த்திக் கொண்டு ஊர் சுற்றுகின்றன. சிதைந்துபோன கொட்டில்களில் தூங்கி வழிவனவெல்லாம் பறட்டைகளும் கறுப்புகளும் கொம்பு முளைக்காத குட்டிகளும் எனக் கூறிக்கொள்கின்றன. தம்மைச் சுற்றிய எல்லாவற்றையும் கண்காணிப்பதற்கும் விடுப்புப் பார்ப்பதற்கும் தம் வீட்டுத்தாயரின் தாவணிகளைப் பங்குபோட்டுக் கொண்டு எஜமானன் போல் வருகின்றன. பட்டுப்பீதாம்பரமும் ஆரவாரமும் நிலையானது என்று இதுவரை யாரும் சொல்லவில்லையே! ஒருவாய்ச் சோற்றுக்கு அல்லாடுபவன் கம்பிமீது நின்றாடும் நிலையில் எங்கள் ஆடுகள். 210920102015 --------- நன்றி- vaarppu.com , காற்றுவெளி (மின்னிதழ்)