வெள்ளாடுகளின் பயணம்


-துவாரகன்

ஆட்டுக் கட்டையை விட்டு
எல்லா வெள்ளாடுகளும்
வெளியேறி விட்டன.
கண்ட இடமெல்லாம் வாய்வைக்கும் என்று
என் அம்மா
ஒரு போதும்
வெள்ளாடுகளை வாங்கி வளர்ப்பதில்லை.

இப்போ அவை
பட்டுப்பீதாம்பரம் போர்த்திக் கொண்டு
ஊர் சுற்றுகின்றன.

சிதைந்துபோன கொட்டில்களில்
தூங்கி வழிவனவெல்லாம்
பறட்டைகளும் கறுப்புகளும்
கொம்பு முளைக்காத குட்டிகளும்
எனக் கூறிக்கொள்கின்றன.

தம்மைச் சுற்றிய
எல்லாவற்றையும் கண்காணிப்பதற்கும்
விடுப்புப் பார்ப்பதற்கும்
தம் வீட்டுத்தாயரின் தாவணிகளைப்
பங்குபோட்டுக் கொண்டு
எஜமானன் போல் வருகின்றன.

பட்டுப்பீதாம்பரமும்
ஆரவாரமும்
நிலையானது என்று
இதுவரை யாரும் சொல்லவில்லையே!

ஒருவாய்ச் சோற்றுக்கு அல்லாடுபவன்
கம்பிமீது நின்றாடும் நிலையில்
எங்கள் ஆடுகள்.
210920102015
---------
நன்றி- vaarppu.com , காற்றுவெளி (மின்னிதழ்)

கருத்துகள்

  1. #
    தீபச்செல்வன் பிரதீபன் likes this.
    #
    முகநூலில் பகிர்ந்தவை
    *
    Dr.Muttiah Kathiravetpillai Muruganandan பட்டுப் பீதாம்பரத்தால் மூடி மறைத்து
    வெளி வேடம் பூணுபவர்கள்
    வெறியாட்டமும் போட்டு
    தம் சுயம் மறைப்பர்.
    சுயம் இழந்த பேடியர்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தூய்மையும் தூமையும்

பாம்புகளுக்கு குழந்தைகள் மீது கருணை பிறந்த கதை

அப்போது வானம் எவ்வளவு அழகாக இருந்தது