- துவாரகன்
பசுந்தழைகளோடு தலையாட்டி
ஆழவேரோடிய
மரத்தின் நம்பிக்கை
நினைவுகளில் மட்டும்தானா?
பெருமூச்சுக்களிடையே
தொலைந்து போகின்றன
அழகிய காலங்கள்
இற்றுப்போய்விடுமென்று தெரிந்தும்
வாழைநாரால் அலங்கரித்த
பூச்சாடியை
வீட்டு முகப்பில் வைத்திருக்கிறான்
பால்யவயதுத் தோழன்.
2025/07

கருத்துகள்
கருத்துரையிடுக