முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுண்டெலிகள் பெருகிவிட்டன' சிங்களத்தில்


 

எனது மற்றுமொரு கவிதையான 'சுண்டெலிகள் பெருகிவிட்டன' சிங்களத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. Ibnu Asumath அவர்களுக்கு மேலான அன்பும் நன்றியும்.

'இப்னு அஸூமத்'தின் சிங்கள மொழிபெயர்ப்பு இங்கே உள்ளது :

தமிழ் மூலக்கவிதை இங்கே உள்ளது :

---------------
මෙම හික් මීයන්හට
පාසැලක් ද නොමැත
ගුරුවරුන් ද නොමැත
ඔවුන් දන්නා දේ
කරවල සුවඳ ද
පොල් කැබැලි ද පමණි
ගේ මුදුන්වල
සෙල්ලම් කරමින් සිටි මීයන්
දැන් බිමට බැස
නර්තනයේ යෙදෙන්නට පටන් ගෙනය
පූසන්
මීයන් අල්ලා ගැණීම
අමතක කොට
නර්තනය රස විඳින්නේය
කළ යුත්තක් වෙනත් නොමැත
ඉතිං අපි ද
අත් පොළසන් දී
දිරිමත් කළ යුතුය
නැතහොත්
මී කතුරුවල
අපව මාට්ටු කළ යුතුවනු ඇත
- තුවාරකන්
- පරිවර්තනය - ඉබ්නු අසූමත්
சுண்டெலிகள் பெருகிவிட்டன
- துவாரகன்
இந்தச் சுண்டெலிகளுக்கு
பள்ளிகளும் இல்லை
ஆசிரியர்களும் இல்லை.
அவற்றுக்குத் தெரிந்ததெல்லாம்
கருவாட்டு வாசனையும்
தேங்காய்ச் சொட்டுக்களும்தான்.
வீட்டு முகடுகளில்
விளையாடித் திரிந்த எலிகள்
இப்போது
தரையில் இறங்கி
நடனமாடத் தொடங்கிவிட்டன.
பூனைகள்,
எலி பிடிப்பதை மறந்துவிட்டு
நடனத்தை ரசிக்கின்றன.
வேறுவழியில்லை!
இனி நாங்களும்
கைதட்டி உற்சாகப்படுத்தவேண்டும்.
இல்லையெனில்
எலிப்பொறிகளில்
எங்களை மாட்டிக் கொள்ளவேண்டும்.
26012023

கருத்துகள்

  1. (முகநூல் கருத்துகள்)

    Kajendran Veluppillai
    Congratulations 👏👏
    7 w
    Reply
    Gowry Mohan
    7 w
    Reply
    குடத்தனை உதயன்
    மகிழ்வான வாழ்த்துக்கள்
    7 w
    Reply
    வி. அபிவர்ணா
    Congratulations!!❤️
    7 w
    Reply
    Seenithamby Rajanayagam
    நல் வாழ்த்துக்கள்
    7 w
    Reply
    Ehamparam Raviprakash
    Congratulations
    7 w
    Reply
    Alex Paranthaman
    வாழ்த்துகள்.
    7 w
    Reply
    Sarmilan Printers
    Congratulations ❤️❤️❤️
    7 w
    Reply
    Navanesan Murugesu
    Congratulations 🎉🎈🎊
    7 w
    Reply
    Tharma Theva
    Congratulations
    7 w
    Reply
    Ravi Sivalingam
    Congratulations 🎉🎈🎊
    7 w
    Reply
    Polikai Jeya
    இந்த சுண்டெலிகள் கற்கவில்லை// அவர்கள் வாழ்வியலில் அறிந்தது தேங்காய்ச்சொட்டும்+ கருவாட்டு வாசத்தையுமே//அவர்கள் இப்போ ஆடும் நடனத்தை நாம் பாத்து கைதட்டாவிட்டால் எமக்கான தண்டனையாக நாம் பொறியில் மாட்டுவோம்...
    .....சுண்டெலியை கருவாக்கி உருவாக்கிய இயற்ப்பியல் கவிதை சிறப்பு... வாழ்த்துகிறேன்.. தம்பி..குணேஸ்..
    7 w
    Reply
    Varathalingam Ramanasuthan
    7 w
    Reply
    Soba Suren
    Congratulations 🎈🎊🎉
    7 w
    Reply
    Sellakkuddy Ganeshan
    மகிழ்ச்சி
    வாழ்த்துகள்
    7 w
    Reply
    Bamini Vasibama
    Congratulations 🎈🎊🎉
    7 w
    Reply

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காடு

-துவாரகன்- அற்புதங்களையும் ரகஷ்யங்களையும் மறைத்து வைத்திருக்கும் அழகிய உலகம் பொய்யும் கபடமும் இந்தக் காடுகளிடம் இல்லை சிறகுவிரித்து நுழைய நுழைய தன் கரம் நீட்டிக் காப்பாற்றும். இயற்கையிலும் வாழ்க்கையிலும் மோகம் கொண்ட மனிதன் காடுகளைக் கண்டடைந்தான். பசியோடு வந்தவனுக்குப் பரிமாறியது காடு ஜீவராசிகளின் சரணாலயம் ஆகியது காடு உயிர்த்தாதுக்களின் உற்பத்தி மையம் ஆகியது காடு காடுகளில்தான் மனிதன் வேட்டையாடக் கற்றுக் கொண்டான் காடுகளில்தான் மனிதன் போராடக் கற்றுக் கொண்டான் காடுகளில் இருந்துதான் மனிதன் நாடுகளைப் பிடித்தான். வீரர்களைக் காக்கும் விரிந்த உலகானது காடு. நாகரீக மனிதனோ, காட்டில் இருந்து வந்தவனை நாடோடி என்றான். காட்டைச் சூழ்ச்சிகளின் கூடாரமாக்கினான். ஆனாலும், காடுகளே அற்புதங்கள் காடுகளே ரகஷ்யங்களின் பொக்கிஷங்கள் காடுகளே விடுதலையின் வெற்றிகள் 051220100655

உறைந்துபோன கண்கள்

-துவாரகன் சொற்கள் செத்துப்போன கணங்களில் கைகளும் கால்களும் உறைந்தன. கண்கள் உயிரின் பாஷைகளாயின. வெளிச்சத்தில் குறுகவும் அதிசயத்தில் விரியவும் பழக்கப்பட்ட கண்கள் அவை பெருமரத்தின் கீற்றுத் துண்டுகள் உயிர்கொண்ட கணத்தில்... மண்ணும் கல்லும் சாந்தும் குழைத்தெழுந்த சுவர்களுக்கு ஈரத்தோடு உயிர்பிறந்தபோது, மனிதர்களுக்காக கண்கள் பேசத் தொடங்கின. எத்தனை ஜோடிக்கண்கள் பேசின எத்தனை ஜோடிக் கண்கள் துடித்தன எத்தனை ஜோடிக்கண்கள் இரந்தன எத்தனை ஜோடிக் கண்கள் பார்த்துக்கொண்டேயிருந்தன. வாழத்துடிக்கும் ஆசை அந்தக் கண்களில் இருந்தது. கருணையை கையேந்தி இரந்துகொண்டே பலிபீடத்தில் வெட்டுண்டு கிடக்கும் ஆட்டின் குருதியென உறைந்திருந்தன. சுருட்டுப்புகையோடு ஆறுதலாய்க் கதைபேசிச் செல்லும் 'சொக்கன்அண்ணா' ஒருநாள் மாலைக்கருக்கலில் பனையால் விழுந்து செத்துக் கிடந்தபோது கண்கள் மட்டும் விழிந்தபடியே உறைந்திருந்தன. சொற்கள் செத்துப்போன கணங்கள் அவை. குப்பையில் தூக்கிவீசப்பட்ட ஒரு பொம்மையைப் போலவே! 04/2012 ---

யாரிடம் விற்றுத் தீர்ப்பது?

-துவாரகன் துளிர்த்துச் சிலிர்த்துப் பற்றிப் படர்ந்து கிட்ட இருக்கும் கிளைகளெல்லாம் எட்டிப் பிடிக்கின்றன நச்சுக்கொடிகள். அன்று முல்லைக்கொடி படரத் தேர் ஈந்தான் பாரி. இன்று நச்சுக்கொடி படர என்னவெல்லாம் ஈந்தனர் எங்கள் பாரிகள். கொடிசுற்றிப் பிறந்த பிள்ளை குலத்துக்காகாது என்றே கோயிலெல்லாம் சுற்றிப் பிணி நீக்கினாள் எங்கள் பாட்டி. வீட்டில் வளர்த்த மாட்டுக்கு குண்டிப்பக்கம் நாகபடம் உடனே விற்றுவிடு என்றார் அப்பா. உடம்பெல்லாம் நச்சுக்கொடி படரத் திரியும் எங்கள் தனயன்மாரை நாங்கள் யாரிடம் விற்றுத்தீர்ப்பது? கிழவியைத் துகிலுரிந்து பார்ப்பதும் குழந்தையைப் பிரித்துக் கிழிப்பதும் குமரியைச் சிதைத்துக் கொல்வதும் இன்னும்... அப்பனையும் அண்ணனையும் அடித்துக் கொல்வதும் எந்தக் குலத்திலையா எங்களுக்குச் சொல்லித்தந்தார்? நாங்கள் நச்சுக்கொடிகளோடு வாழ்கிறோம். இந்த உலகத்தின் அதிமானிடர் என்று சொல்லிக்கொண்டே. 05/2012