பூதங்களை அடைத்துவைக்கத் தெரியாத மந்திரவாதிகள்
மிகத் திறமான
மந்திரவாதிகள்
எத்தனை பெரிய பூதங்களையும்
அடைத்துவைக்கும் வித்தையைக் கற்றிருந்தார்கள்.
காட்டிலோ கடலிலோ அகப்பட்ட
ஜாடிகளைத் திறந்து
பூதங்களிடம்
மனிதர்கள் அகப்பட்ட கதைகளை
பாட்டி சொல்லக் கேட்டிருக்கிறேன்.
இந்த மந்திரவாதிகள்
ஆடைகளை அழகாக அணிந்திருக்கிறார்களேயன்றி
மந்திரக்கோலில்லா மந்திரவாதிகளாகத்தான்
இருக்கிறார்கள்.
இன்று
தெருக்களிலும்
வீட்டுத் திண்ணைகளிலும்
புகுந்து அச்சுறுத்துகின்றன
விதம்விதமான பூதங்கள்.
18092023
கருத்துகள்
கருத்துரையிடுக