பாரமாகும் கற்கள்

 


-துவாரகன்

வீதிகளிலும் வரிசைகளிலும்
விசாரிப்புகளிலும்
உணர்வும் உடலும்
கரைந்து கொண்டிருக்கிறன.
மண்வெட்டியைச் சாய்த்துவிட்டு
அன்றைய நாட்கூலியை
பிரித்துப் பார்க்கிறான்
களைப்பு நீங்காத உழைப்பாளி.
துலாக்கோல் கல்லாய்
அழுத்திக் கொண்டிருக்கும்
வாழ்வின் சுமையை
மடியில் சுருட்டிய தாள்கள்
ஏளனம் செய்கின்றன.
உயிர்க்கயிற்றை
கொஞ்சம் கொஞ்சமாய்
இழுத்துக் கொண்டிருக்கிறோம்.
அள்ளவே முடியாத
ஆழத்திற்கு
சென்றுகொண்டிருக்கிறது
விடாய்தீர்க்கும் மருந்து.
26062022

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தூய்மையும் தூமையும்

பாம்புகளுக்கு குழந்தைகள் மீது கருணை பிறந்த கதை

சபிக்கப்பட்ட உலகு -1