- துவாரகன்
மற்றவர் பொருளைத் திருட
என் தந்தை
எனக்குக் கற்றுத் தரவில்லை.
நானும் என் மகனுக்குக்
கற்றுக் கொடுக்கப் போவதில்லை.
நிரம்பக் கற்றவர்களும்
மற்றவர் பொருளைத்
திருடக் கற்றிருக்கிறார்கள்.
செருப்பைக்கூட...
களவாக அணிந்து பார்க்க
ஆசைப்படுகிறார்கள்.
இந்திரன் சேவலாகியதும்
திருட்டுக்காகத்தான்.
பூனையாகிப் பொட்டுக்குள்ளால்
தப்பியோடியதும்
திருடியதால்த்தான்.
ஏன், அகலிகைக்கு மட்டும்
தான் அணிந்திருந்தது
தன் செருப்பில்லையென்று
தெரியாமலா போனது?
திருடியவரும்
திருடக் கொடுத்தவரும்
பிரதியுபகாரமாக
ஒன்றை இன்னொன்றால்
நிரப்பிக் கொள்கிறார்கள்போலும்!
12012022
கருத்துகள்
கருத்துரையிடுக