-துவாரகன்
பொய்யருக்கும்
காமுகருக்கும்
சட்டவிரோதிகளுக்கும்
இந்த
அழகிய வெளி
திறக்கப்பட்டிருக்கிறது.
மூலையில்
பதுங்கியிருக்கும்
உண்மையை
சவுக்கால்
அடியுங்கள்.
ஒழுக்கத்திற்கு
முட்கிரீடம்
சூட்டுங்கள்.
நேர்மைக்கு
நஞ்சுகொடுத்துச்
சாவடியுங்கள்.
மீளவும்
உயிர்க்காதபடி
மூன்று
சிலுவைகளிலும்
முந்நூறு ஆணிகொண்டு
அறையுங்கள்.
நாங்கள்
எல்லோரும்
பொய்யரைப்
போற்றுவோம்.
நாங்கள்
எல்லோரும்
காமுகரைக்
கொண்டாடுவோம்.
நாங்கள்
எல்லோரும்
சட்டவிரோதிகளுக்குப்
பன்னீர்
தெளிப்போம்.
04012022
கருத்துகள்
கருத்துரையிடுக