-       - துவாரகன் 
வெட்கப்படவேண்டியது
நீங்கள்தான்.
உங்கள்
நிர்வாணம்தான் 
வீதியெங்கும்
மிதக்கிறது. 
மண்ணைக்
கிளறி 
வெற்றிலைக்காவி
தெரியச் சிரிக்கும் 
உ
ழைப்பாளியும் 
உங்களைப்
பற்றித்தான் 
கேலி
பேசுகிறான். 
இதைவிட
ஓட்டைச்
சிரட்டைக்குள் 
சீவனை
விட்டிருக்கலாம் 
என்கிறாள்
அம்மா. 
என்
பாட்டனின் 
கைகளில்
இருந்த 
தளநாரின்
வலிமைகூட 
உங்களிடம்
இப்போ இல்லை.
‘யுரேக்கா’
என்றபடி 
அவன்
வீதியில் ஓடியபோது 
யாருக்கும்
அவனின்
நிர்வாணம் தெரியவில்லை. 
நாலுகூட்டுக்
கச்சேரியான 
பரிவாரத்திலும்
உங்கள்
நிர்வாணமே 
எங்களுக்குத்
துலக்கமாயிருக்கிறது. 
முற்றும்
துறத்தல் என்பதும் 
சாத்தியமில்லாதபோது,
இருளே
உமதானது. 
ஒளியே
எமதானது. 
13102021

கருத்துகள்
கருத்துரையிடுக