தூய்மையும் தூமையும்
-துவாரகன் இப்பொழுதெல்லாம் புனிதம் பற்றிப் பேசுகிறாய் தூசுகளால் ஆன இந்த உலகு தூ(ய்)மை நிறைந்ததுதான் பட்டுப்போன மரக்கொட்டுக்கூட உனக்குப் புனிதமென்றால் எனக்கென்ன இருந்து விட்டுப்போகட்டுமே! குழந்தைகளின் மண்விளையாட்டுப்போல் என் வாழ்வழித்து புதிதுபுதிதாய் வரைகிறாயே இதை என்னவென்பது? முகப்பூச்சுப் பூசிக்கொண்டு சிரிப்பதும் நாற்றத்தை மறைக்க வாசனைத் திரவியம் பூசுவதும் பூச்செண்டு தந்து முறுவலிப்பதும்கூட இருந்து விட்டுப்போகட்டும். தொப்புட்கொடிப் பிறப்பும் மரணவீட்டுப் பிணமும் ஒருவேளை தீட்டாக இருக்கலாம் உன் வீட்டுப் பூச்சாடியும் நாய்க்குட்டியும் உனக்குப் புனிதமென்றால் என் பூர்வீகமும் நாமமும் என்ன தூமைச் சீலையா? 03/2011 நன்றி - பதிவுகள்/
சிறு கவிதையிலேயே அனுபவித்து எழுதப்பட்ட்டுள்ளது.எங்கோ ஒரு மூலையில் க்கத் துடித்தபடியே இருக்கும்.
பதிலளிநீக்குவாழ்த்துக்களுடன்.
நன்றி முல்லை அமுதன்.
பதிலளிநீக்கு