அப்படி வளைந்தால்தான் உயிர்வாழவும், உயரவும் முடியுமாம். அதிகமானவர்கள் அதற்காக வளைந்து வளைந்து கூனலாகிப் போனார்கள். பிறகு என்ன பிரயோசனம்? வருகைக்கு நன்றி தாரணி.
-துவாரகன் இப்பொழுதெல்லாம் புனிதம் பற்றிப் பேசுகிறாய் தூசுகளால் ஆன இந்த உலகு தூ(ய்)மை நிறைந்ததுதான் பட்டுப்போன மரக்கொட்டுக்கூட உனக்குப் புனிதமென்றால் எனக்கென்ன இருந்து விட்டுப்போகட்டுமே! குழந்தைகளின் மண்விளையாட்டுப்போல் என் வாழ்வழித்து புதிதுபுதிதாய் வரைகிறாயே இதை என்னவென்பது? முகப்பூச்சுப் பூசிக்கொண்டு சிரிப்பதும் நாற்றத்தை மறைக்க வாசனைத் திரவியம் பூசுவதும் பூச்செண்டு தந்து முறுவலிப்பதும்கூட இருந்து விட்டுப்போகட்டும். தொப்புட்கொடிப் பிறப்பும் மரணவீட்டுப் பிணமும் ஒருவேளை தீட்டாக இருக்கலாம் உன் வீட்டுப் பூச்சாடியும் நாய்க்குட்டியும் உனக்குப் புனிதமென்றால் என் பூர்வீகமும் நாமமும் என்ன தூமைச் சீலையா? 03/2011 நன்றி - பதிவுகள்/
- துவாரகன் - பாறாங்கற்களிலும் தாழைமரங்களிலும் தம்மை மறைத்துக் கொண்டிருந்த பாம்புகளுக்கு இப்போ செட்டை கழற்றும் வயசாச்சு. கண்டவர் அஞ்சும் கோலங்கள் இட்ட தம் செட்டையை குழந்தைகளுடன் குதூகலிக்கும் ஆசையில் கழற்றிக் கொண்டிருக்கின்றன. பஞ்சுமிட்டாய்க்காரன் போலவும் பலூன்காரன் போலவும் பபூன் போலவும் குழந்தைகளுக்கு ஆசையூட்டிக் கொண்டிருக்கின்றன. இந்தப் பாம்புகள்தான் எங்கள் வீடுகளில் நுழைந்து குழந்தைகளைப் பயமுறுத்தியவை. இந்தப் பாம்புகள்தான் எங்கள் குழந்தைகளை நித்திரையில் தீண்டிவிட்டுப் போனவை. இந்தப் பாம்புகள்தான் பிள்ளைகளின் பாற்கலயத்தில் விசத்தைக் கக்கிவிட்டுப் போனவை. இடறி வீழ்ந்துகிடந்த எங்கள் பிள்ளைகளை ஓர்ஆட்டுக்குட்டியைப்போல் இறுக்கி முறித்துக் கொன்றவையும் இவைதான். கொடிய விசத்தை இரட்டை நாவுக்குள் மறைத்து கொண்டு இராட்டினத்தில் ஏறி குழந்தைகளுடன் விளையாட ஆசைப்படும் பாம்புகளுக்கு இப்போ மட்டும் இந்தக் கருணை எங்கிருந்து பிறந்ததாம்? குழந்தைகள் பாவம் அவர்களை விளையாட விட்ட தாய்மாரும் ஏதுமறியார் கபடதாரிப் பாம்புகளே இனியாவது கொஞ்சம் விலகியிருங்கள். 1...
- துவாரகன் என் அம்மம்மாவின் உலகத்தில் வானம் எவ்வளவு அழகாக இருந்தது. முற்றத்தில் இருத்தி திரளைச்சோறு குழைத்துத் தந்த ஞாபகம். எப்போதும் ஒரு நார்க்கடகத்துடன் நடந்து வருவாள். கறிக்குக் கீரை சாப்பிடப் பழங்கள் மடியில் எங்களுக்காக ஒளித்துக்கொண்டு வந்த பணியாரங்கள். முதல்நாள் இருமியதைக் கண்டு மொசுமொசுக்கையுடன் ‘உறெட்டி’யும் தட்டித் தருவாள் தோடம்பழ மிட்டாய் அவளுக்கு மிகப் பிடிக்கும் தங்கை ‘புஸ்பா’வின் பெயர் அவள் வாயில் வராதெனத் தெரிந்தும் சகோதரர் நாம், சொல்லுமாறு அடம்பிடிப்போம் சாதிச்செருக்கின் மிச்ச வடுக்களையும் தன் குறுக்குக்கட்டில் தழும்புகளாய்ச் சுமந்து கொண்டிருந்தாள். எண்பத்தேழில் எங்கள் வீடெரித்தவனும் அதன் பின் தலைப்பாகையுடன் வந்தவனும் எங்கள் கூடுகளைச் சிதைத்துவிட்டுச் சென்றார்கள் தோட்டம்… வீடு… ஆடு…மாடு… பேரப்பிள்ளைகள் என்ற உலகத்தில் வாழ்ந்த அந்த ஜீவன்கள் நோயுடன் நினைந்து நினைந்து செத்துப் போயினர். ஞாபகமாய் இருந்த ஒரேயொரு அடையாள அட்டைப் படத்தையும் பெருப்பிப்பதற்காக ஒரு ஸ்ருடியோவில் கொடுத்து வைத்திருந்தேன். திரும்பியபே...
துவாரகன், என்னால் அப்படி 'ங' போல வளைய முடியாதனால் தான் பலருக்கு ( வீட்டிலும் வெளியிலும்) எதிரியாகி உள்ளேன் ! நல்ல கவிதை
பதிலளிநீக்குஅப்படி வளைந்தால்தான் உயிர்வாழவும், உயரவும் முடியுமாம். அதிகமானவர்கள் அதற்காக வளைந்து வளைந்து கூனலாகிப் போனார்கள். பிறகு என்ன பிரயோசனம்?
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி தாரணி.