ஆகஸ்ட் 08, 2011

யாரோ எங்களைக் களவாடிச் செல்கிறார்கள் -2


-துவாரகன்

முகமூடியில்லை
குறுவாள் இல்லை
சோதரரோடு கைகோர்த்து
நிஜத்தில்
கூடவே இருக்கிறார்கள்
கொள்ளைக்காரர்கள்.

சிரிப்பைப் பறித்து
காட்டேரியிடம் கொடுக்கிறார்கள்
நிலத்தைச் சுருட்டி
நீளமாய் விரித்துப் படுக்கிறார்கள்
குழந்தைகளின் சோற்றை
கூட்டாய்க் களவாடுகிறார்கள்

இருப்பையும் உணர்வையும்
தம் கைகளில் திணிக்கிறார்கள்

மூட்டை கட்டியெடுத்தவருக்கு
படத்தில் இருக்கும்
பாட்டனின் மீசையும்
வளையில் செருகிய
பாக்குவெட்டியும்
உறுத்துகிறது
Night museum
இரவில் உயிர்ப்பதுபோல்
அஞ்சுகிறார்

எங்கள் கடவுளரிடமும் இருக்கிறது
அவரவருக்கு
ஒவ்வொரு பாக்குவெட்டி.
8/2011

(Night museum - சிறுவருக்கான ஜனரஞ்சக ஆங்கிலப் படம். அப்படத்தில் ஒவ்வொரு இரவும் மியூசியத்தில் இருக்கும் எல்லாவற்றுக்கும் உயிர் வந்துவிடும்)

6 கருத்துகள்:

  1. உயர்வான கவிதை. வாழ்த்துக்கள் சோதரா!

    பதிலளிநீக்கு
  2. அருமையான கவிதை வரிகள்.வாழ்த்துக்கள் சகோதரரே!.....

    பதிலளிநீக்கு
  3. அம்பாளடியாள், வருகைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  4. l wasweem akram akram to me
    show details 9:08 AM (23 hours ago)
    hi i red our poem well waseem Akram

    ----

    Reply
    Mathubashini Ragupathy to me
    show details 3:56 PM (16 hours ago)
    குணேஸ்வரன்,

    வரிக்கு வரி நல்லாயிருக்கிறது பாக்குவெட்டிக் கவிதை.

    வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    ஆழியாள்

    பதிலளிநீக்கு
  5. வசீம் அக்ரம், ஆழியாள் ஆகியோரின் மின்னஞ்சல் கருத்துக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு