வார்த்தைகள் புரிந்தபோது... - துவாரகன்
சிங்களத்தில் - இப்னு அஸூமத்
புலுனிகளோடு
என் வார்த்தைகளைப்
பரிமாறிக் கொண்டேன்
எந்தப் பயமுமின்றி அருகே வந்து
தத்தித் திரிவன அவை
சோற்றுப் பருக்கைகளையும்
தானியங்களையும்
தங்கள் சுகதுக்கங்களைப் பேசியபடியே
கொத்தித் தின்றன
பின்னர் விடுவிடுவென பறந்து போயின
என் வார்த்தைகளின் அர்த்தத்தை
மற்றப் பறவைகளும்
புரிந்து கொண்டதில்
காற்றில் மிதந்த புழுகம் எனக்கு
ஒரு மாலைநேரம்
மூஞ்சியை நீட்டிக்கொண்டு
ஒரு கூட்டமே படையெடுத்தது
அன்பு என்ற ஒற்றைச் சொல்
தம்மைப் பயமுறுத்தி விட்டதாம்
நான் கொடுத்த
தானியங்களை மட்டும்
திருப்பித் தந்துவிட்டுப் பறந்தன.
06/2026
என் வார்த்தைகளைப்
பரிமாறிக் கொண்டேன்
எந்தப் பயமுமின்றி அருகே வந்து
தத்தித் திரிவன அவை
சோற்றுப் பருக்கைகளையும்
தானியங்களையும்
தங்கள் சுகதுக்கங்களைப் பேசியபடியே
கொத்தித் தின்றன
பின்னர் விடுவிடுவென பறந்து போயின
என் வார்த்தைகளின் அர்த்தத்தை
மற்றப் பறவைகளும்
புரிந்து கொண்டதில்
காற்றில் மிதந்த புழுகம் எனக்கு
ஒரு மாலைநேரம்
மூஞ்சியை நீட்டிக்கொண்டு
ஒரு கூட்டமே படையெடுத்தது
அன்பு என்ற ஒற்றைச் சொல்
தம்மைப் பயமுறுத்தி விட்டதாம்
நான் கொடுத்த
தானியங்களை மட்டும்
திருப்பித் தந்துவிட்டுப் பறந்தன.
06/2026
වදන් වටහාගත් විට
-----------------------
ගෙට දිනපතා එන
දෙමළිච්චන් සමඟ මාගේ වදන්
හුවමාරු කර ගත්තේය
කිසිම බියකින් තොරව මා අසලට පැමිණ
තතමින් ඇවිදන ඒවා
බත් ඇට ද
ධාන්ය ද
තමන්ගේ සැප දුක් කතාකරමින්ම
කොටා කෑවාය පසුව
හිටි ගමන් පියඹා ගියේය
මාගේ වදන්වල අර්ත්තය
අනෙකුත් පක්ෂිනුත්
වටහා ගැනීම
සුළඟේ පාවෙන සතුටක් ගෙන දුන්නේය
එක්තරා සන්ධ්යා වරුවක
මුහුණු ඇදකරමින්
එක් කණ්ඩායමක්ම ආක්රමණය කළේය
ආදරය කියන එක් වදනක්
තමන් බිය කරන්නට වූයේලු
මා දුන්
ධාන්ය පමණක්
ආපසු දී පියඹන්නට වූහ
- තුවාරගන්
- සිංහලෙන් - ඉබ්නු අසූමත්

கருத்துகள்
கருத்துரையிடுக