சேற்றில் விழுந்தவன் நறுமணம் பூசுகிறான்

 


-துவாரகன்

பெரிய மீன்கள்
விழுங்கிவிடக்கூடும் என்று
சின்னமீன்கள்
கரையொதுங்கி
மண்ணில் விழுந்து
எப்போதாவது
தற்கொலை செய்ததுண்டா?

நீரலையில் எதிர்த்தோடுகின்றன
நீச்சலடித்துத்
துள்ளிவிழுகின்றன
வாழ்ந்துவிடும் ஆசையோடு 
போராடுகின்றன.

உன்னைப்போல்
சேற்றில் விழுந்து
சோரம்போனவனல்ல.

வாழும் ஆசை
சின்ன மீன்குஞ்சின் துடிப்புடன்
இன்னமும் மீதமாயுள்ளது.
29032022

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தூய்மையும் தூமையும்

பாம்புகளுக்கு குழந்தைகள் மீது கருணை பிறந்த கதை

சபிக்கப்பட்ட உலகு -1