- துவாரகன்
அவள் பூனை வளர்ப்பதை
எப்போதும்
விரும்புவதில்லை.
கண்ட
கண்ட இடமெல்லாம் மயிர் உதிர்த்தும்.
திண்ட
மிச்சத்தையும் வீட்டுக்குக் கொண்டு வரும்.
கட்டிலின்
கீழே
கடித்துப்
பாதியான ஓணான் தலையொன்றைக்
கண்ட
நாள்முதல்
அவள்
பூனையை வெறுத்தாள்.
பூனை
உதிர்த்த மயிரைக்
கூட்டித்
தள்ளுவதற்கு
இதுநாள்வரை
நல்ல
தும்புத்தடி கிடைக்கவில்லையென்று
நாளும்
விடியற்காலையில்
புறுபுறுத்துக்
கொண்டேயிருப்பாள்.
பொங்கலோடு
மடைபோட்டுப் பலியிட்ட
வயற்கோயிற்
திருவிழாவில்
காலமெல்லாம்
நின்றுழைக்கும்
மிகத்
திறமான தும்புத்தடி விற்றார்கள்.
கருணையாளரிடம்
மிகத்
திறமான தும்புத்தடிகள் உள்ளன.
அவற்றுள்
ஒன்று
கூட்டக்கூடியது.
இன்னொன்று
கூட்டிக் கொடுக்கக்கூடியது.
270820211212
கருத்துகள்
கருத்துரையிடுக