முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

නගරය

  තුවාරකන් පරිවර්තනය  -  ඉබ්නු   අසූමත් 2012இல் நான் எழுதிய 'நகரம்' என்ற மற்றுமொரு கவிதையை   இப்னு அஸூமத் அவர்கள் சிங்களத்தில் மொழிபெயர்த்துள்ளார். இது சிங்களத்திற்கு மொழிபெயர்க்கப்படும் எனது இரண்டாவது கவிதையாகும். இப்னு அஸூமத் அவர்களுக்கும்   பகிர்ந்த தோழமைத் துடிப்புகளுக்கும்   மிக்க நன்றி. தமிழ் மூலக்கவிதை இங்கே உள்ளது.  நகரம் https://www.facebook.com/groups/1302974290054251/permalink/1550229631995381/ " නගරය " පැහැබරව දිලෙන නගරය උන්මත්තකයන්ගෙන් පිරී ගොසිනි උසි ගන්වන ලද යාන්ත් ‍ රික මිනිස්සුන් මෙන් කවුරුන්දෝ මෙම මිනිස්සුන්ව ක් ‍ රියා කරවයි රාජකාරියට ගිය කෙනා කෑ ගසා විකුණෙන කඩදාසි මල්වල මිළ හෙට්ටු කරමිනි . ටයි , සපත්තු ෆයිල් කවර සමඟ ගංසූරිය වැට තුළ හෙම්බත්වූ මිනිස්සුන්ව රවටන්නට පිටත්වන තවත් සමහරු හුස්ම ගන්නට වෙර දරන්නාගෙන් රෝහල් දොරකඩ සිට හිඟමන් යදියි යාචකයෙක් දෙමාපියන්ද අනෙකුත් අයවලුන්ද මිය යද්දී දෑස් නිලංකාර වන්නට පුදුමාකාර සත්තු මෙන් පිංතූරු ගනිති ...

கவிதை எனும் தேனாறு பக்கத்தில்

  செம்மண் பத்திரிகையின் இவ்வார "கவிதை எனும் தேனாறு" பக்கத்தில் எனது கவிதையினையும் அறிமுகப்படுத்தியுள்ளார் வேலணையூர் தாஸ் அவர்கள். அதில் பத்துக்கட்டளைகள் என்ற கவிதையை எடுத்துக் காட்டியுள்ளார். மிக்க அன்பும் நன்றியும் செம்மண் 2021 கார்த்திகை 6-12

හිස් බෝතල් හා රට කජු ලැලි

තුවාරකන් පරිවර්තනය  -  ඉබ්නු   අසූමත් இப்னு அஸூமத் Ibnu Asumath அவர்கள் எனது "வெற்றுப் போத்தல்களும் கச்சான் கோதுகளும்' என்ற 2013 இல் வந்த கவிதையை சிங்களத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அதனை தோழமைத் துடிப்பு என்ற மொழிபெயர்ப்புப் பக்கத்திலும் பதிவேற்றியிருக்கின்றனர்.  https://www.facebook.com/groups/1302974290054251   சிங்கள மொழிக்குச் செல்லும் எனது முதற் கவிதை இதுவே. நன்றியும் மகிழ்ச்சியும். (தமிழ் மூலக்கவிதை இங்கே உள்ளது.  வெற்றுப் போத்தல்களும் கச்சான் கோதுகளும்   ) " හිස් බෝතල් හා රට කජු ලැලි " සියල්ල සෝදා පිස දමා හමාරය සියල්ල පින්තාරු කළ ද අවසන්ය ලේ පැල්ලම් රූ කැබලි පන්නන සළකුණු සියල්ල දැඩි මහන්සියෙන් ඉවරයක් කර අවසන්ය . නුඹ තවමත් සිහින හා සැබෑව ඔසවමින් ඇවිදින්නේය බුද්ධිය අවුල් කරගෙන ඇත . මෘත දේහයේ මතකයන් ඔසවාගෙන ඇත . නුඹේ ළදරුවාගේ සිඳී ගිය කැබිලි ගෙන ඔඩොක්කුවේ තබා ගෙන ඇත . මා දී ඇති බඹරාගේ නාදය ද හුරතල් වන ගිරවුන්ව ද ඇස් පිල්ලම් ගසන කළාමැදිරියන්ව ද පිළිගැනී...

தோற்றுப்போன வார்த்தைகள்

  - துவாரகன்  அடித்துக்கொண்டோடும்  மழைவெள்ளத்தின் கலகலப்பாக  எத்தனை வார்த்தைகள் உன்னைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்போம். அன்று மட்டும் வார்த்தைகளின்றித்  தோற்றுப்போனோம்.   எல்லோர் முகங்களும் கவிழ்ந்திருந்தன. எல்லோர் உதடுகளும் சொற்களை இழந்திருந்தன. முதலில் எந்த வார்த்தையைப் பேசுவது? உதட்டுக்குள் பரிசோதனை நடந்து கொண்டிருந்தது.   உன் குண்டுக் கண்களும் சிரிப்பும் முன்னே அப்பியிருந்தன. கண்களை நிறைத்தன நீர்த்துளிகள். நெஞ்சத்தை அடைத்தது ஓவென்ற அழுகை.   வாசலில் கேட்ட சைக்கிள் சத்தம் நீண்ட மௌத்தை உடைத்தது. எல்லோரும் ஒரே கணத்தில் திரும்பிப் பார்த்தோம். அப்போதும்கூட… வார்த்தைகள் தோற்றுக் கொண்டேயிருந்தன. (பவித்திரனுக்கு…) 12122021

துறவியின் கற்குவியல்

- துவாரகன்  கருமேகத்தால் உன் நிலவு மூடப்பட்டிருக்கிறது.  உன் நாவு  எப்போதாவது  அந்த வார்த்தைகளை  உச்சாடனம் செய்ததா? பெருவெளிக்குள்  நுழைய முடியமுடியாதபடி  உன்னைப் போர்த்தியிருக்கிறாய். நான் ஒதுக்கித் தள்ளியவற்றுள்  ஒரு மூக்குமின்னியை நேற்றும் நீதானே கண்டெடுத்தாய். அந்தக் கற்குவியல்  மற்றவர் கணக்கல்ல. உனது கணக்கு அதற்கு சாட்சியம் நீயே! கமண்டல நீராவது  கிடைக்கவேண்டும் என்றால் வேடத்தைக் கலைத்துவிடு. 02112021 http://www.easy24news.com/2021/11/%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81/?fbclid=IwAR1uSdB6_7eiXE_xNw8HMI7cCHggt2EbZzlP2WhVQYhIHRcps3vNdSrNNzc

பத்துக் கட்டளைகள்

  - துவாரகன்  உனக்கு பத்துக் கட்டளைகள் கற்றுத்தர ஆசைப்படுகிறேன்.   முதலில் பல்லிளிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். பின்னர் எண்ணெயில்லாமல் பந்தம் பிடிக்கவேண்டும். இன்னமும் அவர்கள் நடக்கும்போது வால் நிலத்தில் படிந்து  அழுக்காகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். வீட்டுச் சுவருக்கு  கூலியில்லாமல்  வர்ணம் பூசவும் மதிய இடைவேளையில் ஏற்றியிறக்கவும் பழகிக் கொள்ளவேண்டும். தேவைப்படும்போது உன் மூளையை கழற்றிவைத்துவிட்டு கோயில் மாடுபோல் எல்லாவற்றுக்கும்  ஆட்டவேண்டும். தாவவும் தழுவவும் தட்டிக்கொடுக்கவும் தெரிந்திருத்தல் வேண்டும். மிக முக்கியமாக, குதிரையேற்றம் பழகியிருத்தலும் அந்தரவேளைகளில் உனக்கும் அவர்களுக்கும் உதவியாய் இருக்கக்கூடும்.   என்ன பத்துக் கட்டளைகளும் சரிதானே? அப்படியானால், கதவைத் திறந்து நீ உள்ளே வரலாம். 25102021. https://vanakkamlondon.com/literature/kavithaikal/2021/10/136245/?fbclid=IwAR1EyihJxZfF3FUO2bpSQuYoAL4BxCv-wnJgnjzY-ODWiJztPU9pWlIVFsk

கடவுள் மறைத்து வைத்த உலகம்

- துவாரகன்  கொள்ளைக்காரரின் கண்களிலிருந்து  கடவுள்  அந்த உலகத்தை  மறைத்து வைத்திருந்தார் அது குழந்தைகளின் உலகம் அங்கே பறவைகளின் சங்கீதம் இருந்தது காற்றுக் கரங்களின்  அரவணைப்பு இருந்தது.  தாய்மடியின் உயிர்ப்பு இருந்தது கொடியோரின் சுவடுகள் இல்லை சுட்டுவிரல்களின் அசைவுகள் இல்லை உயிர் பறிக்கும் குழிகள் இல்லை நீரும் நிலமும் வெளியும்  வரைந்து வைத்த  ஓவியங்கள் இருந்தன உங்கள் திமிர்த்த பார்வைகள்  அங்கு படவேண்டாம் உங்கள் பாவப்பட்ட கரங்கள்  அங்கு தீண்ட வேண்டாம் அது குழந்தைகளின் உலகம்.  17102021 https://vanakkamlondon.com/literature/kavithaikal/2021/10/135190/?fbclid=IwAR3XZgS_zLd0Q3c_pIiMPHU2SPaL_YftBq4oTRLONQdHIqzT-9_eJ6YB61c