சாம்பற்பூச்சிகளென



                            -துவாரகன்
சிரி
அணை
சிதை
ஊரைக்கூட்டு
உனதென்று சொல்

இரத்த நாளம்
மூளைத்திசு
எங்கும்
மூட்டைப் பூச்சியாய்
களிம்பாய் ஒட்டு.

துலா மிதித்து
வந்தாரை வாழவைத்து
வளர்ந்த சாதி
வாய் கிழியச் சொல்.

சுட்டுவிரல்
நாற்காலி
உச்சக்குரலோடு சேர்ந்து
நீயும் விழுங்கு
சாம்பற்பூச்சிகளென!
11/2011

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தூய்மையும் தூமையும்

பாம்புகளுக்கு குழந்தைகள் மீது கருணை பிறந்த கதை

அப்போது வானம் எவ்வளவு அழகாக இருந்தது