முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என் கிராமத்திற்கு வந்துபோன கடலைவியாபாரி




-துவாரகன்

நகரச் சந்துகளில்
கூவிக்கூவி விற்ற
கடலை வியாபாரி
ஒருநாள்
என் சின்னக் கிராமத்திற்கு வந்துபோனான்

மழை பெய்து ஓய்ந்திருந்த
மாலைப்பொழுதில்
சிறுவர்கள் மாபிள் அடித்து
விளையாடிக் கொண்டிருந்தனர்.

பெரியவர்கள் கோவிலில்
கடவுளைக் கண்டு
ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருந்தனர்.

குழந்தைகளின் மூச்சிலும்
சிறுவர்களின் பேச்சிலும்
ஊர் உயிர்த்திருந்தபோது
ஊரின் ஒதுக்குப் புறத்தால்
வந்துபோனான் கடலை வியாபாரி

கடவுளைத் தூக்கி
வீதியுலாச் செல்ல
இளைஞர்களைத் தேடியபோது
அவர்கள்
யாருக்கும் தெரியாமல்
கடலை கொறித்துக் கொண்டிருந்தனர்.

அழகான கிராமத்தின்
குச்சொழுங்கைகள் எல்லாம்
அசிங்கமாயின
பகிர்ந்துண்டவர்களின் எச்சத்தால்.
11/2011
நன்றி - பதிவுகள்,tamilauthors

கருத்துகள்

  1. அருமையான படைப்பு.
    "..கடவுளைக் கண்டு
    ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருந்தவர்.."
    மறைந்த மாயம் என்ன?

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கு நன்றி டொக்டர்.

    பதிலளிநீக்கு
  3. அர்த்தம் நிறைந்த கவிவரிகள். ஆழமான கருத்து- நாகரிகம் கருதி பெண்பாலை ஆண்பாலாக கவிஞர் குறிப்பிட்டிருந்தாலும் , அதை தவிர்த்து பொதுப்பாலில் குறிப்பிட்டிருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும். நன்றி
    Dr Sabesan Thangathurai

    பதிலளிநீக்கு
  4. Dr Sabesan Thangathurai மற்றும் நண்பர் ம.தி. சுதா: வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  5. முகநூல் பதிவுகளில் இருந்து....

    Dr.Muttiah Kathiravetpillai Muruganandan
    அருமையான படைப்பு.
    பகிர்ந்துண்டவர்கள் பலர்
    பகிர்வு நட்பினால் நெருக்கமும் ஆகலாம்.
    எச்சத்தினால் அசிங்கமும் ஆகலாம்.

    வல்லைவெளி: என் கிராமத்திற்கு வந்துபோன கடலைவியாபாரி
    vallaivelie.blogspot.com
    Like · · Share · 6 hours ago ·
    Dr.Muttiah Kathiravetpillai Muruganandan and 3 others like this.

    Vivekananthan Purushothman ‎//அழகான கிராமத்தின்
    குச்சொழுங்கைகள் எல்லாம்
    அசிங்கமாயின
    பகிர்ந்துண்டவர்களின் எச்சத்தால். // super
    6 hours ago · Like · 1

    பதிலளிநீக்கு
  6. முகநூலில் இருந்து மேலும்....

    Kannan Sandralingam அழகான எளிய கவிதை
    Yesterday at 10:23 · Unlike · 2

    Thevarasa Mukunthan கவிதை அருமை. நீங்கள் குறிப்பிடுபவை பல பரிமாணங்களை எடுக்கின்றன. தட்டையாக வாசிக்கும் போது ஒரு அர்த்தத்தையும் ஆழ வாசிக்கும் போது கவிதை பிறிதொரு அர்த்தத்தையும் தருகின்றது. வாழ்த்துக்கள் துவாரகன்!
    8 hours ago · Unlike · 1

    பதிலளிநீக்கு
  7. nazza kavithi,paza vithamana ennangazai thoondichsezgirathu.vaazthukkaz.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காடு

-துவாரகன்- அற்புதங்களையும் ரகஷ்யங்களையும் மறைத்து வைத்திருக்கும் அழகிய உலகம் பொய்யும் கபடமும் இந்தக் காடுகளிடம் இல்லை சிறகுவிரித்து நுழைய நுழைய தன் கரம் நீட்டிக் காப்பாற்றும். இயற்கையிலும் வாழ்க்கையிலும் மோகம் கொண்ட மனிதன் காடுகளைக் கண்டடைந்தான். பசியோடு வந்தவனுக்குப் பரிமாறியது காடு ஜீவராசிகளின் சரணாலயம் ஆகியது காடு உயிர்த்தாதுக்களின் உற்பத்தி மையம் ஆகியது காடு காடுகளில்தான் மனிதன் வேட்டையாடக் கற்றுக் கொண்டான் காடுகளில்தான் மனிதன் போராடக் கற்றுக் கொண்டான் காடுகளில் இருந்துதான் மனிதன் நாடுகளைப் பிடித்தான். வீரர்களைக் காக்கும் விரிந்த உலகானது காடு. நாகரீக மனிதனோ, காட்டில் இருந்து வந்தவனை நாடோடி என்றான். காட்டைச் சூழ்ச்சிகளின் கூடாரமாக்கினான். ஆனாலும், காடுகளே அற்புதங்கள் காடுகளே ரகஷ்யங்களின் பொக்கிஷங்கள் காடுகளே விடுதலையின் வெற்றிகள் 051220100655

உறைந்துபோன கண்கள்

-துவாரகன் சொற்கள் செத்துப்போன கணங்களில் கைகளும் கால்களும் உறைந்தன. கண்கள் உயிரின் பாஷைகளாயின. வெளிச்சத்தில் குறுகவும் அதிசயத்தில் விரியவும் பழக்கப்பட்ட கண்கள் அவை பெருமரத்தின் கீற்றுத் துண்டுகள் உயிர்கொண்ட கணத்தில்... மண்ணும் கல்லும் சாந்தும் குழைத்தெழுந்த சுவர்களுக்கு ஈரத்தோடு உயிர்பிறந்தபோது, மனிதர்களுக்காக கண்கள் பேசத் தொடங்கின. எத்தனை ஜோடிக்கண்கள் பேசின எத்தனை ஜோடிக் கண்கள் துடித்தன எத்தனை ஜோடிக்கண்கள் இரந்தன எத்தனை ஜோடிக் கண்கள் பார்த்துக்கொண்டேயிருந்தன. வாழத்துடிக்கும் ஆசை அந்தக் கண்களில் இருந்தது. கருணையை கையேந்தி இரந்துகொண்டே பலிபீடத்தில் வெட்டுண்டு கிடக்கும் ஆட்டின் குருதியென உறைந்திருந்தன. சுருட்டுப்புகையோடு ஆறுதலாய்க் கதைபேசிச் செல்லும் 'சொக்கன்அண்ணா' ஒருநாள் மாலைக்கருக்கலில் பனையால் விழுந்து செத்துக் கிடந்தபோது கண்கள் மட்டும் விழிந்தபடியே உறைந்திருந்தன. சொற்கள் செத்துப்போன கணங்கள் அவை. குப்பையில் தூக்கிவீசப்பட்ட ஒரு பொம்மையைப் போலவே! 04/2012 ---

யாரிடம் விற்றுத் தீர்ப்பது?

-துவாரகன் துளிர்த்துச் சிலிர்த்துப் பற்றிப் படர்ந்து கிட்ட இருக்கும் கிளைகளெல்லாம் எட்டிப் பிடிக்கின்றன நச்சுக்கொடிகள். அன்று முல்லைக்கொடி படரத் தேர் ஈந்தான் பாரி. இன்று நச்சுக்கொடி படர என்னவெல்லாம் ஈந்தனர் எங்கள் பாரிகள். கொடிசுற்றிப் பிறந்த பிள்ளை குலத்துக்காகாது என்றே கோயிலெல்லாம் சுற்றிப் பிணி நீக்கினாள் எங்கள் பாட்டி. வீட்டில் வளர்த்த மாட்டுக்கு குண்டிப்பக்கம் நாகபடம் உடனே விற்றுவிடு என்றார் அப்பா. உடம்பெல்லாம் நச்சுக்கொடி படரத் திரியும் எங்கள் தனயன்மாரை நாங்கள் யாரிடம் விற்றுத்தீர்ப்பது? கிழவியைத் துகிலுரிந்து பார்ப்பதும் குழந்தையைப் பிரித்துக் கிழிப்பதும் குமரியைச் சிதைத்துக் கொல்வதும் இன்னும்... அப்பனையும் அண்ணனையும் அடித்துக் கொல்வதும் எந்தக் குலத்திலையா எங்களுக்குச் சொல்லித்தந்தார்? நாங்கள் நச்சுக்கொடிகளோடு வாழ்கிறோம். இந்த உலகத்தின் அதிமானிடர் என்று சொல்லிக்கொண்டே. 05/2012