ஒளி


- துவாரகன்

ஒளி
ஞாயிற்றின் தூய சுடர்
இருள் விரட்டி அறிவேற்றும் குறி

விளக்கேந்திய பெருமாட்டியும்
இருள்விரட்டி உயிர்த்திரி தூண்டினாள்.
அப்போதும்கூட
விளக்குகள் விளக்குகளாகவே ஒளிர்ந்தன.

கடவுளின் தூண்டாமணி விளக்கு
களவுபோனதிலிருந்து
விளக்குகளுக்கு
இருள் பற்றிய பயம்
தொடங்கிவிட்டது.

விளக்கைச் சுற்றிய ஈசல்கள்
மழையில் செட்டைகழற்றிச்
செத்துக்கிடந்த நேரம் பார்த்து
கொல்லைப்புறத்தால் கடவுள் வந்தார்.
கையில் அணைந்துபோன விளக்கு.
ஒரு மின்மினிப் பூச்சியை
அடையாளமாகப் பற்றிப் பிடித்திருந்தார்.
10/2011

கருத்துகள்

  1. ஒளி இழப்பு கடவுளுக்குமானதோ?

    பதிலளிநீக்கு
  2. மின்னஞ்சலில் நந்தினி சேவியர்....
    show details Oct 18 (3 days ago)

    good thanks.I will expect more. nanthinyxavier.

    பதிலளிநீக்கு
  3. //கடவுளின் தூண்டாமணி விளக்கு
    களவுபோனதிலிருந்து
    விளக்குகளுக்கு
    இருள் பற்றிய பயம்
    தொடங்கிவிட்டது. //

    arumai..vaalththukkal

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கு மிக்க நன்றி மதுரை சரவணன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தூய்மையும் தூமையும்

பாம்புகளுக்கு குழந்தைகள் மீது கருணை பிறந்த கதை

அப்போது வானம் எவ்வளவு அழகாக இருந்தது