நவம்பர் 28, 2010

யானெவன் செய்கோ?


-துவாரகன்-

அந்தகாரத்தில் ஒலித்து ஓய்ந்துபோன
அந்த ஈன ஒலி
காற்றில் கலந்து கரைந்து போனது.

மெல்ல மெல்ல
மண்ணிலிருந்து எழுந்து
மரங்களில் தெறித்து
வானத்தில் சென்றடங்கிப் போனது.

எது சாட்சி?

ஒரு மரம்
ஓணான், காகம் குருவி
இன்னும்
நான்கு சுவர்களும் பல்லிகளும் சாட்சி.

அந்த வேப்பமர ஊஞ்சல்
அவள்
காற்றில் கூந்தல் விரித்த
கணங்களையும் இழந்து விட்டது.

சுவருக்கும் பல்லிக்கும்
மரத்துக்கும் ஓணானுக்கும்
கடவுள் பேசும் வரம் கொடுத்தால்,
கட்டுண்ட வெளியில் இருந்து
புதையுண்ட மண்ணில் இருந்து
மூடுண்ட அறையுள் இருந்து
இன்னும் கதைகள் பிறக்கும்.

அன்று இசைவோடு ஏமாந்தாள்
குருகு சாட்சியாக.
இன்று அந்தகாரத்தில் அடங்கிப் போனாள்
பல்லியும் ஓணானும் சாட்சியாக.
171120101150
நன்றி- காற்றுவெளி (மின்னிதழ் டிசம்பர்)

7 கருத்துகள்:

  1. "..புதையுண்ட மண்ணில் இருந்து
    மூடுண்ட அறையுள் இருந்து
    இன்னும் கதைகள் பிறக்கும்..."

    அழகான ஆழமான வரிகள்

    பதிலளிநீக்கு
  2. அருமையான வரிகள் இல்லை ஆழமான வரிகள்

    பதிலளிநீக்கு
  3. டொக்டர் எம்.கே. முருகானந்தன் அவர்களுக்கும் கவிஞர் மேமன்கவி அவர்களுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  4. Markandan Rubavathanan to me
    show details 3:29 PM (5 hours ago)
    கவிதைக்கு எடுத்துக்கொண்ட பொருள் நன்று.

    M.Rubavathanan
    Lecturer
    Uva Wellassa University

    பதிலளிநீக்கு
  5. 'பேஸ்புக்' இல் நண்பர்கள் பதிவுசெய்தவை

    Memon Kavi, Kannady Mano and Rukshan Dushmantha Perera like this.

    Memon Kavi புதையுண்ட மண்ணில் இருந்து
    மூடுண்ட அறையுள் இருந்து
    இன்னும் கதைகள் பிறக்கும்..."
    அருமை
    Yesterday at 11:42 · Like · 1 person

    Dr.Muttiah Kathiravetpillai Muruganandan நன்றி மேமன். துவாரகன் மகிழ்வார் உங்கள் கருத்துரையில்.
    Yesterday at 15:24 · Like

    Memon Kavi thanks dr
    Yesterday at 15:37 · Like

    Kamalanathan Sutharsan Atputham
    Yesterday at 16:38 · Like

    பதிலளிநீக்கு
  6. kabvithai nantru.
    vaazhthukal.thodarka.
    mullaiamuthan
    http://kaatruveli-ithazh.blogspot.com/

    பதிலளிநீக்கு
  7. (இக்கவிதை படிகள் ஜனவரி 2011 இதழில் 'அந்தகாரத்தில் ஒலித்து ஓய்ந்துபோன...' என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. அத்தோடு 'குருகு' என வரவேண்டிய இடத்தில் 'குரு' என பதிவாகியுள்ளது. இரண்டு தவறுகளும் எம் சக்தியை மீறி நடந்துள்ளன. படிகள் இதழை வாசிப்போர் கவனத்திற்கு இந்தத் தகவல்)

    பதிலளிநீக்கு