முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மலேசியா இயல் பதிப்பகம் நிகழ்த்திய உரையாடலில்...

  மலேசியா இயல் பதிப்பகமும் இலங்கை ஞானம் இலக்கியப் பண்ணையும் இணைந்து நடாத்திய இலங்கை எழுத்தாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில் 6ஆம் நாள் சு. குணேஸ்வரனுடன் (துவாரகன்) வலையொளியில் நிகழ்த்திய நேரலையின் காணொளி. 

சங்கப் பனுவல்களில் மூத்தோர் வழிபாடாக நடுகல்

கட்டுரை - கலாநிதி சு. குணேஸ்வரன்  தொல்தமிழர் வாழ்வில் மூத்தோர் வழிபாடாக நடுகற் பண்பாடு அமைந்திருக்கின்றது. சங்கப் பனுவல்களின் தொகுப்பு முறையில் காலத்தால் முற்பட்டவையாகிய அகநானூறு புறநானூறு ஆகியவற்றில் பதுக்கை மற்றும் நடுகல் பற்றிய குறிப்புகள் அதிகம் உள்ளன. நடுகற்கள் எவ்வாறு வீரவழிபாடாகவும் சடங்குமுறையாகவும் மாற்றம் பெற்றது என்பதை இனங்காண்பதே இந்த ஆய்வின் நோக்கமாகும். கடவுள்கோட்பாடுகள் உருவாகுவதற்கு முன்னரே தமக்கு முன்னர் வாழ்ந்து தம்குடிகளைக் காத்து மடிந்த வீரர்களை மூத்தோராகக் கருதித் தலைமுறையாகத் தொடர்ந்த மரபே நடுகல் வழிபாடு என அறிய முடிகிறது. இதுவே பிற்காலத்தில் வழிபாட்டுச் சடங்காகவும் கிராமியத் தெய்வ மரபாகவும் மாற்றமுற்றதெனக் கருதமுடிகிறது.  தொடரந்து வாசிக்க  சங்கப் பனுவல்களில் மூத்தோர் வழீபாடாக நடுகல் - கலாநிதி சு. குணேஸ்வரன் otamil.com/index.php?option=com_content&view=article&id=5639%3A2020-01-18-18-01-21&catid=65%3A2014-11-23-05-26-56&Itemid=82&fbclid=IwAR3fnfOcZkY1TuEQb3Xq6W8bfMOmeNAnfDlmcpG5eD58z2pmPRrOzHXPEg8

மண்ணில் மலர்ந்தவை

"இது அவர் அவ்வப்போது எழுதிய சிறிய கட்டுரைகளாக இருந்தாலும் இந்நூலினது ஒவ்வொரு உள்ளடக்கமும் எளிமையான மொழிநடையில் வலுவான நோக்கில் அமைந்திருப்பது சிறப்பாகக் குறிப்பிடவேண்டியதாகும். இது குணேஸ்வரனின் தனித்துவம் எனக்கூறுவதும் மிகப் பொருத்தமானது. தவிரவும் உணர்வு தோய்ந்து எழுதுவதும் செம்மையான நோக்கினை நயம்பட முன்வைத்தலுங்கூட இவரது தனித்துவ இயல்பாகக் கருதுவதில் தவறிருக்க முடியாது."  சு.குணேஸ்வரனின் "மண்ணில் மலர்ந்தவை" என்ற நூலுக்கு இராகவன் எழுதிய அறிமுகக் குறிப்பு. தொடர்ந்து வாசிக்க  மண்ணில் மலர்ந்தவை

அது தன்னைத் தின்றுகொண்டிருக்கிறது

-துவாரகன் அது தன்னைத்தானே தின்று கொண்டிருக்கிறது. கறையானின் இரைக்குத் தீனியாகும் ஏட்டுச் சுவடிபோல. தன் கூட்டத்திலிருந்து தனிமைப்பட்டது. புதிய இணைகளையும் தவிர்த்துக் கொண்டது. இருள் படர்ந்து கண்கள் பூஞ்சையாகி இரத்த ஓட்டம் மரத்து கலங்கள் செயலிழக்கத் தொடங்கின. ஒரு ஒளிப்பொட்டு அதன் கண்களைத் திறக்கும் வரை தன்னைத்தானே தின்று கொண்டிருக்கிறது. 280820191015

ஏணியும் பிசாசும்

- துவாரகன் வானத்தில் சென்றுகொண்டிருந்த பிசாசுகளை அங்கங்கே ஏணி வைத்து இறக்கிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கும் ஒரு ஏணி தாருங்கள். உங்களுக்கு உதவ. எல்லோரும் ஒன்றுசேர்வோம். எங்கள் வாழ்வை பிசாசுகளுக்கு அர்ப்பணிப்போம். 11/2018

கறிவேப்பிலை

- துவாரகன் கறிவேப்பிலை கறிக்குச் சேர்க்கலாம். வீட்டின் கொல்லைப்புறத்தில் கழிவுநீர் ஊற்றியும் வளர்க்கலாம். தேவைப்படும்போது சேர்க்கவும் சாப்பிடும்போது தூக்கி எறியவும் கூடியது. அனேகர் பொதுப்புத்தியும் இதுவே! கறிவேப்பிலைக்கு மருத்துவக் குணமுண்டு என்பதும் அது உண்ணக்கூடியது என்பதும் சிலருக்குத்தான் தெரியும். சில மனிதர்களும் இருக்கிறார்கள். கறிவேப்பிலைபோல்... பயன்படுத்தவும் தூக்கி எறிந்துவிடவும். 072018

நஞ்சூறிய வார்த்தைகள்

- துவாரகன் அவர்களுக்கு மட்டும் இது எப்படித்தான் வாய்த்துவிடுகிறது? கருணை அன்பு இரக்கம் எதுவுமே இல்லை. நல்லபாம்புபோல் நஞ்சு தெறிக்கும் வார்த்தைகளால் தீண்டுகிறார்களே? இன்னொருபுறம் மனத்தில் வைத்துக் குடைந்து கொண்டு வாய்விட்டு அழவும் முடியாமல் மற்றவரிடம் பகிரவும் முடியாமல் பாதிவாழ்வில் காரணம் தெரியாமலே மரித்துப்போகிறார்கள். இதற்கு நஞ்சூட்டிய மனங்கள்தான் காரணமோ? குலைத்துப்போடவும் கூடிக்கெடுக்கவும் புறம்பேசிக் கொல்லவும் அவர்களால் மட்டும் எப்படித்தான் முடிகிறது. இந்த நஞ்சூறிய எண்ணத்தை யாரால்தான் மாற்றமுடியும் அண்டவெளியில் இன்னொரு புதிய கிரகம் பிறந்தாலும் அங்கு சென்றும் நஞ்சூட்டும் எண்ணத்துடன் இவர்கள் விரைந்து கொண்டே இருப்பார்கள். கறங்குபோல் சுழன்று மேலது கீழாய் கீழது மேலாய் மாறும் என்றார் பெரியர். இங்கு கறங்கும் இல்லை. மாற்றமும் இல்லை. 28012018