அது தன்னைத்தானே
தின்று கொண்டிருக்கிறது.
கறையானின் இரைக்குத் தீனியாகும்
ஏட்டுச் சுவடிபோல.
தன் கூட்டத்திலிருந்து தனிமைப்பட்டது.
புதிய இணைகளையும் தவிர்த்துக் கொண்டது.
இருள் படர்ந்து
கண்கள் பூஞ்சையாகி
இரத்த ஓட்டம் மரத்து
கலங்கள் செயலிழக்கத் தொடங்கின.
ஒரு ஒளிப்பொட்டு
அதன் கண்களைத் திறக்கும் வரை
தன்னைத்தானே தின்று கொண்டிருக்கிறது.
280820191015
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக