முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாரமாகும் கற்கள்

  -துவாரகன் வீதிகளிலும் வரிசைகளிலும் விசாரிப்புகளிலும் உணர்வும் உடலும் கரைந்து கொண்டிருக்கிறன. மண்வெட்டியைச் சாய்த்துவிட்டு அன்றைய நாட்கூலியை பிரித்துப் பார்க்கிறான் களைப்பு நீங்காத உழைப்பாளி. துலாக்கோல் கல்லாய் அழுத்திக் கொண்டிருக்கும் வாழ்வின் சுமையை மடியில் சுருட்டிய தாள்கள் ஏளனம் செய்கின்றன. உயிர்க்கயிற்றை கொஞ்சம் கொஞ்சமாய் இழுத்துக் கொண்டிருக்கிறோம். அள்ளவே முடியாத ஆழத்திற்கு சென்றுகொண்டிருக்கிறது விடாய்தீர்க்கும் மருந்து. 26062022 vanakkamlondon.com

மீளவும் மரங்களில் தொங்கி விளையாடலாம் 2

  - துவாரகன் அதிகாரத் திருடர்கள் பாயைச்சுருட்டி கப்பலைக் கட்டையில் ஏற்றிவிட்டு ஜோதிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். வயலில் வலைவீசு என்கிறான் ஒருவன் தோணியில் பயிர்செய்யப் போவென்கிறான் மற்றொருவன். கட்டடக்காடுகளில் இருந்து உலகைச் சிருஷ்டித்தவர்களுக்கு ஒருபோதும் வியர்வையின் உப்பு கரிக்கப்போவதில்லை. கழனிகளைக் காடாக்கி கொவ்வைப்பழமும் புல்லாந்திப்பழமும் தேடித்தின்னும் காலத்தை எமக்குத் தந்தார்கள். பொற்குவையும் காசுகளும் தோம்புகளும்... பானையில் அவித்துக் குடிக்கலாமென்று கண்டுபிடித்தார்களாயின், அவர்களுக்கு காடுகள்கூட தேவைப்படாது போகலாம். எங்களுக்கு மீண்டு வந்ததொரு காலம். மீளவும் மரங்களில் தொங்கிவிளையாடவே! 13062022 மீளவும் மரங்களில் தொங்கி விளையாடலாம் 1 இங்கேயுள்ளது

உறைந்துபோன கண்கள் - சிங்கள மொழிபெயர்ப்பு

  எனது 'உறைந்துபோன கண்கள்' (2012 இல் எழுதப்பட்ட) கவிதையை இப்னு அஸூமத் அவர்கள் சிங்களத்திற்கு மொழிபெயர்த்திருக்கிறார். சிங்கள மொழிக்குச் செல்லும் எனது 4ஆவது கவிதை என்ற வகையில் மிக்க மகிழ்ச்சி. இப்னு அஸூமத்  Ibnu Asumath அவர்களுக்கு அன்பும் நன்றியும் துவாரகனின் மூலக்கவிதையை இங்கே வாசிக்கலாம். உறைந்துபோன கண்கள்    (4) ගල් වී ගිය කඳු`ඵ -------------------- වදන් මිය ගිය අවස්ථාවක දැත් ද දෙපා ද ගල් ගැසීය දැස් ජීවිතයේ භාෂාව විය ආලෝකයේ දී කෙටි වීමට ද ආශ්චර්යේ දී විශාල වීමට ද පුරුදු වූ දැස්ය රූස්ස ගහක තීරු ජීවමාන වූ අවස්ථාවක පස ද ගල් ද බදාම ද මිශ්‍ර වී නැගුණු බිත්තිවලට තෙතමනය සමඟ ජීවය ලැබුණු විට දී මිනිස්සුන් වෙනුවෙන් දැස් කතා කරන්නට විය කෙතරම් ජෝඩු දැස් කතා කළා ද කෙතරම් ජෝඩු දැස් ගැහුණේ ද කෙතරම් ජෝඩු දැස් කරුණාවන්ත වූවා ද කෙතරම් ජෝඩු දැස් බලන් හිටියා ද ජීවත් වීමට අයත් ආශාව එම දැස්වල තිබුණි කරුණාව අත ගෙන යාචකයේ යෙදෙමින්ම අල්තාරයේ කැබිලි ව තිබෙන්නාවූ එ`ඵවාගේ රුධිරය මෙන් ගල් වී තිබුණි සුරුට්ටු දුම් සමඟ සැනසුම් සහගතව කතා කර යන සොක්කන් අයියා දවසක් දා සවස් වරුවේ ගොම්මන් වේලාවක තල්...

சொரணை கெடுதல்

  -        துவாரகன் சொரணை கெடாதிருக்க பனையோலை ஈர்க்கால் நாக்கு வழித்துப் பழகியவர் நாங்கள்.   மரம் தாவும் குரங்குகளில் என்ன அதிசயம் இருக்கப் போகிறது? வார்த்தைகளுக்கு அர்த்தம் இருக்கவேண்டுமல்லவா?     பச்சை மிளகாயை சுவிங்கம்போல் மென்று கொண்டிருக்கிறார்கள். பாகற்காயை கச்சான் கொட்டைபோல் கொறிக்கிறார்கள். நாவுகளும் மரத்துப் போய்விட்டனவா? மனிதர்கள் என்றால் நாவு என்ற ஒன்று இருக்கவேண்டுமல்லவா?   வால்கா நதிக்கரையில் கூன் நிமிர்த்தி நடந்தவர்களை இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறோம். 25052022 vanakkamlondon.com