- துவாரகன்
நீண்ட கோடாக இருள்.
வலிய காந்த இழுப்பில்
ஒட்டிக்கொள்ளும்
துருப்பிடித்த இரும்புத் துகள்களாக.
திருகிப் பூட்டப்பட்ட தண்ணீர்க் குழாயிலிருந்து
ஓரிடைவெளியில்
விட்டுவிட்டுச் சொட்டிக்கொண்டிருகிறது வாழ்வு.
அங்கு எல்லையற்ற
பாலைவெளியாக நீள்கிறது இருள்.
வெளியில் தொலைந்து போனவை
மண்குடிலில் ஒளியேற்றும் சிட்டி விளக்குகள்
அடர்காட்டில் வழிகாட்டும் தீவட்டிகள்
அன்றாடம் வயிறு கழுவும் சூழ்விளக்குகள்
இப்போ வெளிச்சத்தைத் தேடி
வரிசைகட்டி நின்றோரும்
இருளின் ஈர்ப்பில் ஒதுங்குவதற்குத்
தங்களைத் தயார்ப்படுத்துகிறார்கள்.
நீண்ட கோடாக இழுபடுகிறது இருள்.
வலிய காந்த இழுப்பில்
ஒட்டிக்கொள்ளும்
துருப்பிடித்த இரும்புத் துகள்களாகவே.
05/2017
கருத்துகள்
கருத்துரையிடுக