பறித்தெடுக்கப்பட்ட மூலப்பிரதி



- துவாரகன் 

துருப்பிடித்த அடையாளம் அழி
முலாம் பூசு
கண்ணைப் பறிக்கும்
வண்ண விளக்குகள் பொருத்து
கண்டவர் வாய் பிளக்கட்டும்.

மூலப்பிரதியைப் பிரித்தெடுத்து அழி
புனைந்தெழுது
புதிய பக்கம் சேர்
ஏமாந்து போனவனிடம்
பிரதியே இல்லையென்று சொல்.

வாதம் செய்தால்
உன் கச்சையில் இருந்து
பழுப்பேறிய பக்கத்தை எடுத்துக்காட்டு
இதுதான் மூலஓலை என்று.

தலையாட்டிப் பழக்கப்பட்டவை
கோயில் மாடுகள் மட்டுமல்ல.
10/2012
நன்றி - பதிவுகள்

கருத்துகள்

  1. நல்ல கவிதையை படித்ததான மகிழிசி கிடைத்தது.ஆனாலும் எனக்குள்ளேயான தவிப்பும் உங்களிடமும் இருப்பது நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. தலையாட்டிப் பழக்கப்பட்டவை
    கோயில் மாடுகள் மட்டுமல்ல.

    எத்துணை உண்மை

    பதிலளிநீக்கு
  3. வரலாறுகள் மாற்றி எழுதப்படலாம், ஆனால் வரலாறு மாறாது, நமக்கு உணர்வு உள்ளவரை.

    உள் உணர்வுகளுக்கு உருவம் கொடுக்கும் உங்களுக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. முல்லை அமுதன், டொக்டர் எம்.கே முருகானந்தன், வணக்கம் தமிழ்; ஆகியோரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  5. from facebook friend...
    Anand Prasad, Kanthavarothayan Murugesu, Jeyaranjinee Gnanadas and 5 others like this.

    Dr.Muttiah Kathiravetpillai Muruganandan "..தலையாட்டிப் பழக்கப்பட்டவை
    கோயில் மாடுகள் மட்டுமல்ல., அருமை
    14 hours ago · Unlike · 2

    இடுகாட்டான் இதயமுள்ளவன்
    மூலப்பிரதியைப் பிரித்தெடுத்து அழி
    புனைந்தெழுது புதிய பக்கம் சேர் @''''தமிழன் தலைவிதி ....
    14 hours ago · Unlike · 2

    Kanthavarothayan Murugesu
    தலையாட்டிப் பழக்கப்பட்டவை
    கோயில் மாடுகள் மட்டுமல்ல.....
    8 hours ago · Like · 1

    பதிலளிநீக்கு
  6. facebookஇல் நந்தினி சேவியர் எழுதியது...

    Nanthiny Xavier
    நல்லது துவாரகன் ,உங்கள் கவிதை எவ்வளவோ அர்த்தம் நிறைந்ததாய் உள்ளது.நாம் கச்சைகளை இன்னும் அவிழ்க்கவில்லை. அதற்குரிய தேவை வரும்போது அவிழ்க்கத்தான்வேண்டும். கறைகளை கட்டுவதற்காக அல்ல. வாழ்த்துக்கள் .தொடருங்கள்.
    4 hours ago · Unlike · 2

    பதிலளிநீக்கு
  7. வாலாட்டவும் நமக்கு விருப்பமிருக்கிறதே.அப்படியானால் தலையாட்ட வேண்டுந்தானே

    பதிலளிநீக்கு
  8. Yogeswari Sivapragasam; வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  9. மின்னஞ்சலில் சொன்னவை...

    Inbox
    x
    athanas jesurasa

    Nov 3 (4 days ago)

    to me
    நண்பருக்கு,
    வரலாற்று மோசடிகளைப் பற்றிய புரிதல் ஏற்படுகிறது!
    "....தலையாட்டிப் பழக்கப்பட்டவை
    கோயில் மாடுகள் மட்டுமல்ல...." நாமும்தான் - இம் மோசடிகளை மௌனமாக அங்கீகரித்துக்கொண்டு இருக்கிறோமல்லவா?
    - அ . யேசுராசா


    Kandaya Sothithasan

    Nov 5 (2 days ago)

    to me
    அருமையான கவிதை போலித்தனமான அரசியலையும் அப்பாவிகளையும் சாடுகிறது. நன்றி பகிர்விற்கு.


    chithan prasad

    11:14 AM (19 hours ago)

    to me
    nice dwaragan

    பதிலளிநீக்கு
  10. முகநூல் மற்றும் மின்னஞ்சலில் கருத்துரைத்த நண்பர்களுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தூய்மையும் தூமையும்

பாம்புகளுக்கு குழந்தைகள் மீது கருணை பிறந்த கதை

சபிக்கப்பட்ட உலகு -1