ஏப்ரல் 30, 2011

உக்கிப்போன தெருவும் எலும்பும்


-துவாரகன்

உக்கிப்போன தெருவில்
எலும்பொன்றைக் கண்டெடுத்தேன்
சுவட்டெச்ச ஆராய்ச்சிக்கு
மூளை தயாரானபோது
காற்றுக் கைகளிலிருந்து
அது நொறுங்கி விழுந்தது

செத்துக் கோதாகிப்போன
மிருகத்துள் புகுந்து
குடைந்து வெளியேறும் பன்றியைப்போல்
தெருவையும் எலும்பையும்
குடைந்துகொண்டிருக்கிறது பதார்த்தம்.

கொஞ்சம் கொஞ்சமாய்க் கொல்லும்
தீராப்பிணிபோல்...
உக்கிப்போகின்றன
தெருக்களும் எலும்புகளும்.
04/2011
நன்றி - சுடர் ஒளி மே 29

3 கருத்துகள்:

  1. அழகான குறீயீடுகள் உக்கிப்போன நம் சந்ததிகள் எத்தனை  தொடர்ந்து எழுதுங்கள்!

    பதிலளிநீக்கு
  2. முல்லை அமுதன், நேசன்;
    வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு