முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஓங்கியறைந்த வார்த்தை

  - துவாரகன் முகத்தில் ஓங்கியறைந்த வார்த்தை நீண்ட நேரமாக அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தது உவப்பில்லாத அந்த வார்த்தையை மறைப்பதற்காக நேரம் கடத்தும் வித்தையை உடலும் தெரிந்து வைத்திருந்தது யன்னல் மறைப்புக்குக் கட்டிய துணியை அவிழ்த்து மீளவும் கட்டுகிறான் உள்ளேயிருந்த பிளாஸ்ரிக் கதிரையை வெளியே வைக்கிறான் மற்றையது உள்ளே மாறுகிறது வெறுமையான தேநீர்க்குடுவை தூக்கிப் பார்த்து நகர்த்துகிறான் தலைவாசல் முன்னிருந்த கால்விரிப்பு தூசு தட்டப்படாமலே நகர்த்தப்படுகிறது யாரோ வாசலில் நீண்ட நேரமாக அழைத்திருக்கிறார்கள் சின்னவன் வந்து கைகளால் தட்டித் திசைகாட்டுகிறான் எவ்வளவுதான் மறந்தாலும் மறைத்தாலும் அது விடுவதாயில்லை. நன்றி : பதிவுகள்

மூளையைத் தோய்த்தல்

  - துவாரகன்   அழுக்கு அகற்றுதல் நன்று உள அழுக்கு அகற்றுதல் அதனிலும் நன்று வழிகள் தெரிந்து வைத்திருந்தோம்   மீதிப் பணியாரத்தோடு பண்பையும் குப்பைக்கூடையில் வீசி விட்டோமே! யார் தருவார் அறிவாசனம்? யாருக்கு யார் சரியாசனம் என்றுதானே தராசுடன் திரிகிறோம்   ஒரு பாதகமும் இல்லை மூளையைத் தனியே கழற்றி எடுத்து சலவை இயந்திரத்தில் தோய்த்தால் எல்லாம் சரியாகிவிடும்.    

துவாரகனின் நான்கு கவிதைகள்

  1.   அந்தரத்தில் மிதத்தல் மமதையை, யுகங்களாகச் சுமந்துவந்த காலம் இந்த மனிதர்களின் கைகளில் சேர்த்திருக்கிறது. கபடம் நல்ல முகமூடி அதிகாரம் ஒரு சப்பாத்து அதற்குத் தெரிவதெல்லாம் பூச்சிகளும் புற்களும்தான். அதிகார போதையில் வானமும் வசப்படும் சிட்டாய்க்கூடப் பறக்கலாம். பறந்தாலென்ன? அளந்தாலென்ன? நிற்பதற்கு மண்ணுக்குத்தானே வரவேண்டும். மண் புதைகுழி. தீயும்கூடத் தின்று தீர்த்துவிடும். சாம்பல்கூடக் கரைந்துவிடும். எதுவுமில்லை எதுவும். 042024 2.  வேர்கள் மறைந்தே இருக்கட்டும் வேர்கள் எப்போதும்போல் மறைந்தே இருக்கட்டும். மண்ணின் பிடிமானத்தை விட்டு அவை வெளியே வரவேண்டாம். கிளைகளின் களிநடனம் பற்றியும் விருட்சத்தின் வலிமை பற்றியும் அவர்கள் மனங்குளிரப் பேசுவார்கள். தங்கள் வேர்களையும் தேடுவதாகத்தான் கூறுவார்கள். அத்தனையும் பசப்பு வார்த்தைகள். மண்ணும் பெயல்நீரும் பொத்திவைத்த ஆழவோடிய வேர்கள் வெளியே வரவேண்டாம். அவர்களின் குடுவைகளில் இருப்பது உயிர்வளர்க்கும் குளிர்நீரல்ல. உயிர்வாங்கும் சுடுநீர். 052024 3.  ஒரேயொரு கேள்வி கலகலப்புக் குறையாத கூடு அது. ஒவ்வொரு அறையின் சுவர்மூலைகளும் விளக்குக்கரி ...

தருமிமுன் அறுந்துவிழுந்த பொற்கிழி முடிச்சு

துவாரகன் அ யற்சியால் வந்த கனவிலிருந்து விழித்தெழுந்தார். நினைவினூடே நடந்தார். நக்கீரரால் பொற்கிழி மறுக்கப்பட்ட ஏமாற்றம் அவரைப் பொசுக்கிவிட்டது. குடிகாரன் நிலையில் தள்ளாடி நடந்தவர் முன்னால் அதிசயமாக… காலடியில் கிடந்தது பொற்கிழிமுடிச்சு. அன்றிலிருந்து அவரின் துரைத்தனக் கனவு நிறைவேறியது. இனி நினைவில் இருந்த இரண்டுவரிக் கவிதைகூட அவருக்குத் தேவைப்படாது. அவர் துரை. puthu.thinnai.com