கட்டுரை - கலாநிதி சு. குணேஸ்வரன் தொல்தமிழர் வாழ்வில் மூத்தோர் வழிபாடாக நடுகற் பண்பாடு அமைந்திருக்கின்றது. சங்கப் பனுவல்களின் தொகுப்பு முறையில் காலத்தால் முற்பட்டவையாகிய அகநானூறு புறநானூறு ஆகியவற்றில் பதுக்கை மற்றும் நடுகல் பற்றிய குறிப்புகள் அதிகம் உள்ளன. நடுகற்கள் எவ்வாறு வீரவழிபாடாகவும் சடங்குமுறையாகவும் மாற்றம் பெற்றது என்பதை இனங்காண்பதே இந்த ஆய்வின் நோக்கமாகும். கடவுள்கோட்பாடுகள் உருவாகுவதற்கு முன்னரே தமக்கு முன்னர் வாழ்ந்து தம்குடிகளைக் காத்து மடிந்த வீரர்களை மூத்தோராகக் கருதித் தலைமுறையாகத் தொடர்ந்த மரபே நடுகல் வழிபாடு என அறிய முடிகிறது. இதுவே பிற்காலத்தில் வழிபாட்டுச் சடங்காகவும் கிராமியத் தெய்வ மரபாகவும் மாற்றமுற்றதெனக் கருதமுடிகிறது. தொடரந்து வாசிக்க சங்கப் பனுவல்களில் மூத்தோர் வழீபாடாக நடுகல் - கலாநிதி சு. குணேஸ்வரன் otamil.com/index.php?option=com_content&view=article&id=5639%3A2020-01-18-18-01-21&catid=65%3A2014-11-23-05-26-56&Itemid=82&fbclid=IwAR3fnfOcZkY1TuEQb3Xq6W8bfMOmeNAnfDlmcpG5eD58z2pmPRrOzHXPEg8