- துவாரகன் உடலின் அழுக்குப் போக்க கடலில் நீந்தலாம். குளத்தில் முக்குளிக்கலாம். கிணற்று நீரை அள்ளிச் சூடுபோகக் குளிக்கலாம். தொட்டியில் நீர் நிரப்பி நீந்தி விளையாடலாம். மனத்தின் அழுக்குப் போக்க வழியுண்டா? ஞானிகளும் யோகிகளும் அறிவுநிறை சான்றோரும் எத்தனையோ வழிகள் சொன்னார்கள். ஆனால், ஒதுக்குப்புறம் நாடியல்லவா அவர்களை நெருங்குகிறோம்? மூதுரை… நல்வழி… எல்லாவற்றையும் போகிற போக்கில் ஒரு குப்பைக்கூடையில் வீசிவிட்டுச் சென்றுகொண்டே இரு. அகமும் புறமும் அழுக்கு நிரம்பியவன்தான் இந்த உலகின் அதி உன்னத மானிடன் ! 07/2015
துவாரகனின் வலைப்பதிவு