- துவாரகன்
சொரணை
கெடாதிருக்க
பனையோலை
ஈர்க்கால்
நாக்கு
வழித்துப் பழகியவர் நாங்கள்.
என்ன
அதிசயம் இருக்கப் போகிறது?
வார்த்தைகளுக்கு
அர்த்தம்
இருக்கவேண்டுமல்லவா?
சுவிங்கம்போல்
மென்று கொண்டிருக்கிறார்கள்.
பாகற்காயை
கச்சான்
கொட்டைபோல் கொறிக்கிறார்கள்.
நாவுகளும்
மரத்துப் போய்விட்டனவா?
மனிதர்கள்
என்றால்
நாவு
என்ற ஒன்று இருக்கவேண்டுமல்லவா?
கூன்
நிமிர்த்தி நடந்தவர்களை
இன்னமும்
தேடிக் கொண்டிருக்கிறோம்.
25052022

கருத்துகள்
கருத்துரையிடுக