டிசம்பர் 04, 2023
களவாடப்பட்ட நினைவுகள்
நவம்பர் 14, 2023
மறைந்திருக்கும் பறவைகள்
துவாரகனின் இரண்டு கவிதைகள்
1.
அறுவடைக் காலம்
- துவாரகன்
விதைக்கும்போது
நல்விதை தேடிவிதை
என்றார் அப்பு.
ஒரு பூசணி விதையெனினும்
முற்றிய நல்விதை
சாம்பல் சேர்த்து
அடுப்பு முகட்டில்
பொட்டலமாய்த் தொங்க விட்டார்.
மதர்த்து பூத்து
காய்த்துக் குலுங்கின
நல் விதைகள்.
எங்கள் காலத்திலும்
விதைகள் கிடைத்தன.
பிஞ்சிலே முற்றியவையும் பதர்களும்தான்!
அறுவடை செய்கிறோம்
புற்களும் களைகளும்.
2.
நிறைகுடம்
- துவாரகன்
அதிகம் பேசாதே
சிரித்துக் கதைக்காதே
எப்போதும்
முகத்தை இறுக்கமாக வைத்துக்கொள்
அறிவாளி.
மலைமேல் எதுவுமில்லை
எனினும்
மழை பெய்கிறது
நிறைகுடமாயிரு
புத்திசாலி.
குறைகுடம்கூடத் தளம்பாது
யாருக்குத் தெரியப்போகிறது
தளம்பாது இரு
நீயும் நிறைகுடம்.
நன்றி : கலைமுகம், 75 ஆவது இதழ்
சுண்டெலிகள் பெருகிவிட்டன' சிங்களத்தில்
எனது மற்றுமொரு கவிதையான 'சுண்டெலிகள் பெருகிவிட்டன' சிங்களத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. Ibnu Asumath அவர்களுக்கு மேலான அன்பும் நன்றியும்.
பூதங்களை அடைத்துவைக்கத் தெரியாத மந்திரவாதிகள்
ஜூன் 03, 2023
இது யாருடைய வீடு
கதிரையதிகாரம்
துரோகத்தின் நாவுகள்
ஏப்ரல் 02, 2023
சுண்டெலிகள் பெருகிவிட்டன
பிப்ரவரி 23, 2023
பூஞ்சை
ஜனவரி 27, 2023
துவாரகனின் 'காலத்தின் ரேகை' கவிதை சிங்களத்தில்
இப்னு அஸூமத் அவர்கள் சிங்கள மொழிக்கு அறிமுகப்படுத்தும் (மொ.பெ) எனது ஏழாவது கவிதை 'காலத்தின் ரேகை'. Ibnu Asumath அவர்களுக்கு அன்பும் நன்றியும். - துவாரகன்
தமிழ் மூலக்கவிதை இணைப்பு : காலத்தின் ரேகை - துவாரகன்
சிங்கள மொழிபெயர்ப்பு இணைப்பு : කාලයේ රේඛාව
The line of time------------------A rainfall that is sprayed by tirednessThe gap without human voiceFilling up the radioIs it the cat that was rubbing his leg?The dog that was wagging its tailWent for a rideOnly TamiliansOut of curiosity in square yardBehind the art halls that have lost their feelingsAnd the people are gone tooIn a life where the light and the light are togetherThe light that blinks the eyeShe is not going to be comfortableSo called by the nameThat moment for a voiceJust passing byAt the dirty tableKeeping the right hand ඈKulati is looking at the endThe sound of some feetWearing the eyeglasses from the stance.Finding the decorationLonelinessTo have crushed under her feetTime is flying by stripping its linesOn my ownThe towelTranslation - Ibnu is unusual