நவம்பர் 01, 2022

பூங்குருவிகள்

துவாரகன்

பூங்குருவிகள் இப்போ
சோலைகளுக்கு வருவதில்லை.
நீரோடும் வாய்க்காலில்
சிறகுலர்த்துவதில்லை.
பறவைகளில் நீங்கள்தான்
இனிமையாகப் பாடக்கூடியவர்கள்
யாரோ கதையடித்து விட்டார்கள்.
அன்றிலிருந்து
மண்டை வீங்கிய
மனிதர்களாகிவிட்டன
பூங்குருவிகள்.
 
உறவுகளைக் கொத்திக் கலைத்தன.
கீச்சிடும் பறவைகளை அதட்டின.
குழந்தைகளைத் துரத்திக் கொத்தின.
வீதியில் வழிப்பறி செய்தன.
வெற்றிலைத் துப்பலையும்
கெட்ட வார்த்தைகளையும்
கழித்துக் கொட்டும் மனிதர்கள்போல்
கண்ட இடமெல்லாம் எச்சமிட்டன.
வலதுபுறம் சமிக்ஞைகாட்டிவிட்டு
இடதுபுறம் திரும்பின.
 
இனி
அந்த வயல்வெளியில்
சிறகுலர்த்தும் அழகு இல்லை.
இனிமை ததும்பும்
மென்குரல் இல்லை.
 
பூங்குருவிகளும்
மனிதர்களைப் போலவே
துரோகமும் ஏமாற்றுவித்தையும்
கற்றுக் கொண்டனபோலும்.


நன்றி : வகவம், கவிதை இதழ் 2
2022/10

துவாரகனின் 'உனது கடலில்...' கவிதை - சிங்கள மொழிபெயர்ப்பு

 பேரன்பும் நன்றியும் Ibnu Asumath அவர்களுக்கு. சிங்கள மொழிக்குச் செல்லும் எனது 6ஆவது கவிதை இது.

மொழிபெயர்ப்பு இணைப்பு : https://www.facebook.com/thuwan.azeez.7/posts/pfbid0N5ybyEwgVPjtjcL4pVpcCWYBF14oiUbcsLfvk4a6UbFd2EdTMKfJxaxfiCsPKj1sl

தமிழ் மூலம் இணைப்பு : https://vallaivelie.blogspot.com/2022/04/blog-post_28.html




ඔබේ මුහුද
-------------
ඔඹේ මුහුද ඇල්මකින් යුතුව
ඇයට ඔබ තෑගි කළේය
ශුද්ධවන්ත වුවක් බව පැවැසුවේය
මද සිනහවක් නැගුවේය
මුහුද හැර
මහ වීදියක ඇවිදින්නට ආශා විය
වාහන තදබද මැද අන්දමන්ද විය
ගුවනේ පියඹා හෝ
යන බවට කීවේය
වැරැදි මග දිගේ
මුතුන් මිත්තන්ගේ අත්දැකීම්
මුරුංගා මිටිය ද
කරුත්තකො`ඵම්බාන් අඹ ද
පැරැණි ඉරණම යැයි කීහ
මුණියප්පර් දෙවියන් වෙනුවෙට
මුණියප්පර්ම පෙරට ආහ
ව්යවහාරය වෙනස්කළේය
සාධකයන් කුණු කූඩයට වීසි කළේය
කපටිකම හා ඊර්ෂියාව පිරුණු
සොර පාරක් විවෘත්ත විය
නුඹ
පව් මත නැගී සිටිමින්
මමත්වයෙන් යුතුව දෑත් විළිත්තාගෙනය
ඔවුනොවුනගේ මුහුදුවල
ඔවුනොවුන් පීනන විට
නුඹේ මුහුදේ පමණක්
වෙනත් අයෙතු පීනමින්ය
තුවාරගන්
පරිවර්තනය - ඉබ්නු අසූමත්
Your ocean
-------------
Your ocean is in love
You gave her a gift
Holded to be a holy one
Gave a little laugh
Except for the sea
Wanted to walk down the main street
Got blind in the middle of traffic
Flying in the air
Just said to be going
Along the wrong way
Experiences of the ancestors
Is it a bundle of drumsticks?
Karuttako, is it a mango?
The old fate is said
For the sake of God Muniyappar
Muniyappaparma is in the front
Changed the outrage
Factors threw in the trash
Full of crooks and jealousy
A thief road was open
You?
Standing up on the sins
Hands with ego and ego
In the sea of them
When they are swimming
Only in your sea
Others are swimming in
Thuwaragan
Translation - Ibnu is unusual

துவாரகனின் 'பாரமாகும் கற்கள்' - சிங்கள மொழிபெயர்ப்பு

 சிங்கள மொழிபெயர்ப்பில்  'பாமாகும் கற்கள்' என்ற கவிதை வெளிவந்துள்ளது. இப்னு அஃமத் அவர்கள் மொழிபெயர்ப்பில் வெளிவந்திருக்கும் எனது 5ஆவது கவிதை இதுவாகும். 

தமிழ் மூலக் கவிதையின் இணைப்பு பாரமாகும் கற்கள் : https://vanakkamlondon.com/literature/2022/06/165429/?fbclid=IwAR1d_PRUR5uuaXQ0B4jasRqabP6pDvGuIrb18nNXfJC1AMUqfSZ62fsssGY

சிங்கள மொழிபெயர்ப்பின் இணைப்பு : https://www.facebook.com/thuwan.azeez.7/posts/pfbid0KfKAvCqxkWuoNPAHQm7EJXqF2QgEZLojPC336Fjb9RecE3MCAA96Zmo9hYHSxgDJl




බරවී ගිය ගල්
----------------
වීදිවල පෝලිම්වල විමසීම්වල
හැඟීම් ද ශරීරය ද
දියවෙමින්ය
උදැල්ල හේත්තු කර එදින දෛනික වැටුප
දිගු හැර බලන්නේය
මහන්සිය නොහැරුණු කම්කරුවා
ආඩි කඳ ගල් මෙන්
තද කරමින් තිබෙන්නාවු
ජීවිතයේ බර
ඔඩොක්කුවේ ගුලි කළ නෝට්ටු
පරිහාසය කරති
පණහි ළණුව
කෙමෙන් කෙමෙන් අදිමින් සිටින්නෙමු
ගන්නට නොහැකි ගැඹුරට
යමින්ය පිපාසය සංසිඳෙන බෙහෙත
තුවාරගන්
පරිවර්තනය - ඉබ්නු අසූමත්
The stones that were heavy
----------------
In queues on the streets and inquiries
Emotions or the body
Melting down
Daily salary for the day after the morning.
Looking at the long one
The worker who has not worked hard
Adi body is like rocks
Would have been tightening up
The weight of life
The notes that were shot in the head
Making fun of it
The rope of life
We are pulling in slowly
To the depth that cannot be taken
Medicine to quench thirst
Towargan
Translation - Ibnu is unusual
 
Hide Translation
 

அக்டோபர் 29, 2022

வித்தைக்காரனின் பின்னால் இருப்பவன்


-துவாரகன் 

அவரவர் நிலைக்கு இறங்கி வருகிறாய்
மனிதநேயம் என்கிறார்கள்
அவர்களோடு தேநீர் அருந்துகிறாய்
நட்பானவர் என்கிறார்கள்
அவர்களின் நலத்தை விசாரிக்கிறாய்
நல்ல மனிதர் என்கிறார்கள்
அநீதிக்கு எதிர்க்குரல் தருகிறாய்
நியாயமானவர் என்கிறார்கள்
ஏற்றத்தாழ்வை அகற்றக் கேட்கிறாய்
நீதிமான் என்கிறார்கள்
சந்நிதானத்தில் கண்மூடிப் பாடுகிறாய்
பக்தியானவர் என்கிறார்கள்
மரபுகளைக் கட்டியிழுக்கிறாய்
பண்பாடானவர் என்கிறார்கள்
உலக விவகாரங்களை உரத்துப் பேசுகிறாய்
அறிவாளி என்கிறார்கள்
 
எல்லாம் வல்லவை
கண்கள் விரிய வியக்கிறோம்.
 
ஒரு குரல்…
எல்லாம் எனக்குத் தெரியும்
கண்கட்டி வித்தை என்கிறது.
 
நீயும் வித்தைக்காரனோ?


10/2022
நன்றி : பதிவுகள் 

ஜூலை 11, 2022

பாரமாகும் கற்கள்

 


-துவாரகன்

வீதிகளிலும் வரிசைகளிலும்
விசாரிப்புகளிலும்
உணர்வும் உடலும்
கரைந்து கொண்டிருக்கிறன.
மண்வெட்டியைச் சாய்த்துவிட்டு
அன்றைய நாட்கூலியை
பிரித்துப் பார்க்கிறான்
களைப்பு நீங்காத உழைப்பாளி.
துலாக்கோல் கல்லாய்
அழுத்திக் கொண்டிருக்கும்
வாழ்வின் சுமையை
மடியில் சுருட்டிய தாள்கள்
ஏளனம் செய்கின்றன.
உயிர்க்கயிற்றை
கொஞ்சம் கொஞ்சமாய்
இழுத்துக் கொண்டிருக்கிறோம்.
அள்ளவே முடியாத
ஆழத்திற்கு
சென்றுகொண்டிருக்கிறது
விடாய்தீர்க்கும் மருந்து.
26062022

மீளவும் மரங்களில் தொங்கி விளையாடலாம் 2

 


- துவாரகன்

அதிகாரத் திருடர்கள்
பாயைச்சுருட்டி
கப்பலைக் கட்டையில் ஏற்றிவிட்டு
ஜோதிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
வயலில் வலைவீசு என்கிறான் ஒருவன்
தோணியில் பயிர்செய்யப் போவென்கிறான்
மற்றொருவன்.
கட்டடக்காடுகளில் இருந்து
உலகைச் சிருஷ்டித்தவர்களுக்கு
ஒருபோதும்
வியர்வையின் உப்பு
கரிக்கப்போவதில்லை.
கழனிகளைக் காடாக்கி
கொவ்வைப்பழமும் புல்லாந்திப்பழமும்
தேடித்தின்னும் காலத்தை
எமக்குத் தந்தார்கள்.
பொற்குவையும் காசுகளும்
தோம்புகளும்...
பானையில் அவித்துக்
குடிக்கலாமென்று கண்டுபிடித்தார்களாயின்,
அவர்களுக்கு
காடுகள்கூட தேவைப்படாது போகலாம்.
எங்களுக்கு
மீண்டு வந்ததொரு காலம்.
மீளவும் மரங்களில் தொங்கிவிளையாடவே!
13062022

ஜூலை 10, 2022

உறைந்துபோன கண்கள் - சிங்கள மொழிபெயர்ப்பு

 


எனது 'உறைந்துபோன கண்கள்' (2012 இல் எழுதப்பட்ட) கவிதையை இப்னு அஸூமத் அவர்கள் சிங்களத்திற்கு மொழிபெயர்த்திருக்கிறார். சிங்கள மொழிக்குச் செல்லும் எனது 4ஆவது கவிதை என்ற வகையில் மிக்க மகிழ்ச்சி. இப்னு அஸூமத் Ibnu Asumathஅவர்களுக்கு அன்பும் நன்றியும்

துவாரகனின் மூலக்கவிதையை இங்கே வாசிக்கலாம்.

உறைந்துபோன கண்கள்  


(4)
ගල් වී ගිය කඳු`ඵ
--------------------

වදන් මිය ගිය අවස්ථාවක
දැත් ද දෙපා ද ගල් ගැසීය

දැස් ජීවිතයේ භාෂාව විය

ආලෝකයේ දී කෙටි වීමට ද
ආශ්චර්යේ දී විශාල වීමට ද
පුරුදු වූ දැස්ය

රූස්ස ගහක තීරු
ජීවමාන වූ අවස්ථාවක
පස ද ගල් ද බදාම ද
මිශ්‍ර වී නැගුණු බිත්තිවලට
තෙතමනය සමඟ ජීවය ලැබුණු විට දී
මිනිස්සුන් වෙනුවෙන් දැස් කතා කරන්නට විය

කෙතරම් ජෝඩු දැස් කතා කළා ද
කෙතරම් ජෝඩු දැස් ගැහුණේ ද
කෙතරම් ජෝඩු දැස් කරුණාවන්ත වූවා ද
කෙතරම් ජෝඩු දැස් බලන් හිටියා ද

ජීවත් වීමට අයත් ආශාව එම දැස්වල තිබුණි

කරුණාව අත ගෙන යාචකයේ යෙදෙමින්ම
අල්තාරයේ කැබිලි ව තිබෙන්නාවූ
එ`ඵවාගේ රුධිරය මෙන් ගල් වී තිබුණි

සුරුට්ටු දුම් සමඟ
සැනසුම් සහගතව කතා කර යන
සොක්කන් අයියා
දවසක් දා සවස් වරුවේ
ගොම්මන් වේලාවක
තල් ගසෙන් වැටී මිය ගොස් සිටි විට
දැස් පමණක් විවෘත්ත ව ගල් ගැසී තිබුණි

වදන් මිය ගිය අවස්ථාවකි එය

කුණු කූඩයට වීසි කළ
බෝනික්කෙක් මෙන්

තුවාරගන්
පරිවර්තනය - ඉබ්නු අසූත්

(4)
The mountains that were rocked
--------------------
When the words died
Stones were thrown at feet and hands.

Eyes were the language of life

To be short in the light
To be big in miracle
The eye that used to be

Stripes of a beautiful tree
In a moment when I was alive
Soil or stone or Wednesday?
To the walls that were mixed up
When life comes with the moisture
Eyes had to speak for people

How many couples eyes spoke
How many couples were in the eyes
What a couple eyes kind
How many couples eyes were watching

Those eyes had the desire to live

Praying for grace in hand
Might have been pieces on the altar
It was rocked like their blood

With the smoke of the cigarettes
Speaking with comfort
Sokkan brother
One day in the evening
In a time of hotness
When you fell from the palm tree and died
Only eyes were stoned openly

That's a moment where the words died

Thrown in the garbage bin
Just like a doll

Thuwaragan
Translation - Ibnu Asuth

சொரணை கெடுதல்

 


-      துவாரகன்

சொரணை கெடாதிருக்க
பனையோலை ஈர்க்கால்
நாக்கு வழித்துப் பழகியவர் நாங்கள்.
 
மரம் தாவும் குரங்குகளில்
என்ன அதிசயம் இருக்கப் போகிறது?
வார்த்தைகளுக்கு
அர்த்தம் இருக்கவேண்டுமல்லவா?  
 
பச்சை மிளகாயை
சுவிங்கம்போல் மென்று கொண்டிருக்கிறார்கள்.
பாகற்காயை
கச்சான் கொட்டைபோல் கொறிக்கிறார்கள்.
நாவுகளும் மரத்துப் போய்விட்டனவா?
மனிதர்கள் என்றால்
நாவு என்ற ஒன்று இருக்கவேண்டுமல்லவா?
 
வால்கா நதிக்கரையில்
கூன் நிமிர்த்தி நடந்தவர்களை
இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறோம்.
25052022

vanakkamlondon.com


மே 16, 2022

ஐந்நூறு கிராமங்களைத் தின்னும் ஆடு

 -துவாரகன்


இருவர் சேர்க்கையால் 

கலந்த நாற்றம்

ஐவரைச் சுற்றிக்கொண்டிருந்தது.

இப்போது ஐந்நூறு ஊர்களில் வீசிக்கொண்டிருக்கிறது


எப்படியாயினும் 

அந்த நாற்றத்தைத் தீர்க்கும்

வழியெதுவும் 

அவனுக்குப் புலப்படவில்லை.


ஒருவேளை

இரண்டு கிராமங்களைத் தின்ற

அந்த வெள்ளாடு வாய்த்தால்

ஐந்நூறு கிராமங்களில் உலாவும்

நாற்றத்தைத் தின்று தீர்த்துவிடலாம்.


ஒரேயொரு பத்திரம்தான்.

எழுதித்

தலைமாட்டில் வைத்துப் படுத்திருக்கிறான்.

ஒரு வெள்ளாடு

அந்த நாற்றத்தைத் தீர்த்துவிடும்

என்ற நம்பிக்கையோடு.

15052022

மே 13, 2022

காறை பெயரும் சுவர்கள்


-துவாரகன்
உங்களைச் சுற்றி
பெரிய சுவர்களை எழுப்பியுள்ளீர்கள்.
தவறுதலாகக்கூட
எங்கள் மூச்சுக்காற்று
பட்டுவிடக்கூடாதென
இடையில் கண்ணாடிகளையும் பொருத்தியுள்ளீர்கள்.
உங்கள் சுட்டுவிரல்களுக்கும்
உங்கள் குரல்களுக்கும்
உங்கள் பொதிகளுக்கும்
ஓர் எருமைக்கூட்டம்
உள்ளதென நினைத்தீர்கள்போலும்.
நன்றாகக் கவனியுங்கள்
நீங்கள் கட்டிய சுவர்களின்
காறைகள் பெயரத் தொடங்கியுள்ளன.
உப்புக் காற்றில் கற்கள்
போறையாகிக் கொண்டிருக்கின்றன.
அத்திவாரக் கற்களின் கீழே
நீரோடிய பாதைகள் துலக்கமாயுள்ளன.
இன்னமும்
இந்தச் சுவர்கள்
பலமென்று நம்புகிறீர்களா?
கருமேகக்கூட்டம்
எப்போதும் வானத்திற்குச் சொந்தமில்லையென்று
ஒரு தவிட்டுக் குருவிக்குக்கூட
நன்றாகத் தெரியும்.
நீங்களும்
நம்பித்தான் ஆகவேண்டும்!
10042022

ஏப்ரல் 07, 2022

உனது கடலில் வேறொருவன் நீச்சலடிக்கிறான்



-துவாரகன்


உனது கடலை
பிரியமுடன் அவளுக்குப்
பரிசளித்தாய்
புனிதம் என்றார்
புன்முறுவல் சேர்த்தார்

கடலை விட்டு
பெருவீதியில் நடக்க ஆசைப்பட்டாய்
வாகன நெரிசலிடை முக்குப்பட்டாய்
வானத்தால்
பறந்தாவது செல்வேன் என்றாய்

குறுக்குவழியே
முன்னோர் அனுபவம்

முருங்கைக்காய் கட்டும்
கறுத்தக்கொழும்பானும்
பழைய விதிகள் என்றாய்.

முனியப்பருக்குப் பதில்
முனியப்பரே முன்வந்தார்.

மரபை மாற்றினாய்
சான்றுகளைக் குப்பையில் வீசினாய்
கபடமும் அசூசையும் நிறைந்த
கள்ளப்பாதையொன்று திறந்தது

நீயோ,
பாவங்களின் மீதேறிநின்று
மமதையுடன்
பல்லிளித்துக் கொண்டிருக்கிறாய்.

அவரவர் கடலில்
அவரவர் நீச்சலடிக்க,
உனது கடலில் மட்டும்
வேறொருவன்
நீச்சலடித்துக் கொண்டிருக்கிறான்.
02042022

சேற்றில் விழுந்தவன் நறுமணம் பூசுகிறான்

 


-துவாரகன்

பெரிய மீன்கள்
விழுங்கிவிடக்கூடும் என்று
சின்னமீன்கள்
கரையொதுங்கி
மண்ணில் விழுந்து
எப்போதாவது
தற்கொலை செய்ததுண்டா?

நீரலையில் எதிர்த்தோடுகின்றன
நீச்சலடித்துத்
துள்ளிவிழுகின்றன
வாழ்ந்துவிடும் ஆசையோடு 
போராடுகின்றன.

உன்னைப்போல்
சேற்றில் விழுந்து
சோரம்போனவனல்ல.

வாழும் ஆசை
சின்ன மீன்குஞ்சின் துடிப்புடன்
இன்னமும் மீதமாயுள்ளது.
29032022