மே 28, 2013

முதுமரத் தாய்


- துவாரகன்

அடங்க மறுத்து
ஆர்ப்பரிக்கும் அலைகளாக
தீர்ந்து போகாத நினைவுகள்

வாழ்வின் இறுதி மணித்துளிகள்
அந்த விழிகளுக்குள்
இறுகிப்போயின.
சிறகடிக்கும் ஆசைகள்
மண்ணோடு மண்ணாய்
இற்றுப்போயின.

தளர்ந்து செதிலாகிப் போன
கால்களை நீட்டியபடி
இன்னமும் தீர்ந்து போகாத
அந்த நினைவுகளோடு
காத்திருக்கிறாள்
முதுமரத் தாயொருத்தி.

அறுந்துபோன செருப்பைத்
தூக்கியெறிந்து விட்டு செல்வதுபோல்
எல்லோரும்
அவளைக் கடந்து கொண்டிருக்கிறார்கள்.
2013/05

7 கருத்துகள்:

  1. Jeeva Kumaran

    10:45 PM (33 minutes ago)

    to me
    அறுந்துபோன செருப்பைத்
    தூக்கியெறிந்து விட்டு செல்வதுபோல்

    Very good PADDIMAM

    Vaalthukkal

    With regards
    Jeevakumaran from Denmark

    பதிலளிநீக்கு
  2. Chandra Sekaran

    9:54 AM (0 minutes ago)

    to me
    முதுமரத்தாய் அருமையான சொல் .கவிதை, இழந்த சோகங்களை மீட்டெடுக்க முயற்ச்சிக்கிறது .இற்றை நாள் கொடுமையை விளக்குகிறது .
    நல்ல கவிதை நண்பா .......
    சந்திரசேகரன்

    பதிலளிநீக்கு
  3. Neelambigai Kanthappu

    9:51 PM (0 minutes ago)

    to me
    ஐயா
    எனக்கு தங்களை யாரெனத் தெரியவில்லை .ஆனால் எனக்குப் பொருந்தும் போல் இருக்கின்றது . நம்பிக்கை, முயற்சி திருவினையாக்கும் .
    நன்றி
    க .நீலாம்பிகை

    பதிலளிநீக்கு
  4. Kotti Thirumuruganadam

    6:35 PM (0 minutes ago)

    to me
    பேரன்புடையீர் வணக்கம்.

    கவிதை மிகவும் நன்றாக உள்ளது. நல்வாழ்த்துகள்.
    அன்புடன்

    கோட்டி திருமுருகானந்தம்.

    பதிலளிநீக்கு
  5. Saddanathan Kanagaratnam, Sinnaraja Vimalan, Theepika Theepa and 7 others like this.
    Pirainila Krish

    அறுந்துபோன செருப்பைத்
    தூக்கியெறிந்து விட்டு செல்வதுபோல்
    Tuesday at 6:46am · Unlike · 1


    யாழ். இலக்கியக் குவியம்

    அடங்க மறுத்து
    ஆர்ப்பரிக்கும் அலைகளாக
    தீர்ந்து போகாத நினைவுகள்
    Tuesday at 4:48pm · Unlike · 1

    பதிலளிநீக்கு
  6. உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருக்கும்
    சோகங்களை,
    பிரவாகமாய்ப்
    பொங்க வைக்கிறது
    உங்கள் கவிதை,
    துவாரகன்

    பதிலளிநீக்கு
  7. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு