ஆகஸ்ட் 18, 2011

ங போல் வளை


-துவாரகன்

உடல் குறுகு
எலும்பை மற
கும்பிடு போடு
நாணலாய் இரு
தவளையாவாய்.

இனிப்பெனச் சொல்
குட்டையைக் குளமாக்கு
இன்னும்...
ங போல் வளை
தமிழ்ப்பாட்டிக்கு நன்றி சொல்
நீ துளிர்ப்பாய்.
8/2011

2 கருத்துகள்:

  1. துவாரகன், என்னால் அப்படி 'ங' போல வளைய முடியாதனால் தான் பலருக்கு ( வீட்டிலும் வெளியிலும்) எதிரியாகி உள்ளேன் ! நல்ல கவிதை

    பதிலளிநீக்கு
  2. அப்படி வளைந்தால்தான் உயிர்வாழவும், உயரவும் முடியுமாம். அதிகமானவர்கள் அதற்காக வளைந்து வளைந்து கூனலாகிப் போனார்கள். பிறகு என்ன பிரயோசனம்?
    வருகைக்கு நன்றி தாரணி.

    பதிலளிநீக்கு