- துவாரகன்
துரோகத்தின் நாவுகள்
மண்ணில் ஊன்றிய வேர்களைப்போல் மறைந்துள்ளன.
தாயென முலைதந்து
தாலாட்டிய நல்மரங்களென
எண்ணியிருந்தோம்.
நச்சுமரமாகித் துரத்துகின்றன.
துரோகத்தின் நாவுகள்தான்
சிலுவை சுமக்க வைக்கின்றன.
உணர்வைக் கொல்கின்றன.
சந்தனக் குழம்பு பூசி
நறுமண வார்த்தைகளோடு
உலாவும்
நாவுகளிலிருந்து
நினைவே நீ விலகிவிடு.
மறதியே நீ வாழ்ந்துவிடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக