- பா. இரகுவரன்
சு. குணேஸ்வரன் எழுதிய “மண்ணில் மலர்ந்தவை” என்ற
நூல் அண்மையில் கிடைக்கப் பெற்றேன். முன்அட்டைப்படமாக தொண்டைமானாற்றின் அருகாமையில்
மரபுரிமைச் சின்னமாக அமைந்திருக்கும் கரும்பாவளிக்கேணி மிக அழகாக அச்சில் பதிவாக்கப்பட்டிருக்கின்றது.
யாழ்ப்பாணம் Book Lab இன் வெளியீடாக வந்துள்ள இந்த நூலை, யாழ்ப்பாணம் “குரு பிறின்டேர்ஸ்”
மிகச் சிறப்பாக அச்சாக்கம் செய்துள்ளது.
சமூக முன்னோடி ஓய்வுபெற்ற அதிபர் திரு செ. சதானந்தன்
அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ள இந்நூலில், சிறுகதை பற்றிய இரண்டு கட்டுரைகளும்
நாவல் பற்றிய மூன்று கட்டுரைகளும் கவிதைத் தொகுதிகள் பற்றிய ஆறு கட்டுரைகளும் “கரும்பாவாளி”
ஆவணப்படம் மற்றும் “ஆஸ்திரேலியவில் தமிழ் கற்பித்தல்”
ஆகிய கட்டுரைகளுடன் கலை இலக்கிய ஆளுமைகளான கவிஞர் மு. செல்லையா , வே. ஐ வரதராஜன், கண.
மகேஸ்வரன், நந்தினி சேவியர், பேராசிரியர் செ. யோகராசா ஆகியோர் பற்றிய ஐந்து கட்டுரைகளுமாக
மொத்தம் பதினெட்டுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து வாசிக்க : https://sevvarathai-aachchi.blogspot.com/2021/01/blog-post.html