செப்டம்பர் 17, 2011

கிழித்துப்போடு





-துவாரகன்

ண்டைக்குள் குறவணன் புழு
நரம்புகளுள் கொழுக்கிப்புழு
வாயில் செத்துப்போன மிருகத்தின் நாற்றம்
உடலெங்கும் ஊனம்

இன்னும்
பேசிப்பேசியே வாசனை பூசு

கவச குண்டலம்
பந்தியில் பறிபோனது
காண்டீபம்
திருவிழாவில் தொலைந்து போனது
சாரதியும்
தேரோடு செத்துப்போனான்

இந்த அழகிய உலகில்
அழுகிய மனிதர்களோடு
இன்னமும் வாழ்கிறேன்
என்று உன் வரலாற்றில் எழுது.
இல்லையெனில்
இந்தக் கவிதையைக் கிழித்துப்போடு!
2011/09