ஜனவரி 04, 2013

கொம்பு முளைத்த மனிதர்கள்


- துவாரகன் 

புதிய நட்சத்திரங்கள்
வானத்தில் மின்னத்தொடங்கிய காலம்முதல்
வீதியில் நடந்து கொண்டிருந்த மனிதர்களுக்கு
கொம்பு முளைக்கத் தொடங்கியது.

கோயிற் கச்சான் கடையில்
விற்பனைக்கு வைத்த
மிருகங்களின் வால்களையும் காதுகளையும்
விருப்பமானவர்கள் அணிந்து கொண்டார்கள்.

மாடுகள் போலவும்
நரிகள்போலவும்
நாய்கள் போலவும்
குரங்குகள் போலவும்
ஓசையிடக் கற்றுக்கொண்டார்கள்.

தாவரங்களையும் கிழங்குகளையும்
தின்னத் தொடங்கினார்கள்.
ஆற்றில் நீர் குடிக்கவும்
சுவடறிந்து இடம்பெயரவும்
இரைமீட்கவும்
பழகிக் கொண்டார்கள்.

வீடுகள் எல்லாம் வெறிச்சோடின.
காடுகள் எல்லாம்
புதிய மிருகங்களால் நிரம்பி வழிந்தன.

உண்மை மிருகங்களின்
கொம்புகளும் காதுகளும்
உதிர்ந்து கொண்டிருக்க,
மீண்டும்
வால்கா நதிக்கரையில் இருந்து
கூன் நிமிர்த்தியபடி நடந்து வருகிறார்கள்
புதிய மனிதர்கள்.
01/2013

2 கருத்துகள்:

  1. 8:34am
    Rajaji Rajagopalan

    வாசித்து மகிழ்ந்தேன்; மீண்டும் பலமுறை காண வருவேன். நன்றி.

    Today
    8:51pm
    Ehamparam Ravivarmah

    மிக அருமையான கவிதை.யதார்த்தமாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  2. முகநூலில் இருந்து...

    Ehamparam Ravivarmah, Sihabdeen Najimudeen, Thenusha Logeswaran and 6 others like this.
    Raguvaran Balakrishnan oh ahaha ha ha ....
    17 hours ago · Unlike · 1

    Kanthavarothayan Murugesu அருமையான வரிகள், தேவையான பதங்கள்,
    தேடலுக்கு கிடைத்த, தேன்....
    12 hours ago · Unlike · 1

    Zan San அருமையான வரிகள்.....
    12 hours ago · Unlike · 1

    Seena Uthayakumar ஆரைக் குறி வைத்தீர்களோ? இதில் ஒரு சந்தேகம், அதாவது, முதல் நட்சத்திரம் தோன்றிய போது தோன்றிய மனிதன் என்பது! ஏனென்றால், பு‘மி உண்டான போதே நட்சத்திரமும் தோன்றியிருந்தன. ஆனால், எவ்வளவு காலம் கழித்துத்தான் மனிதன் தோன்றியிருக்கிறான்! விஞ்ஞான சொற்களை கவிதைகளில் புகுத்தும்போது மிக அவதானமாக இருக்க வேணும்
    10 hours ago · Unlike · 1

    Subramaniam Kuneswaran முதல் நட்சத்திரம் அல்ல. புதிய நட்சத்திரங்கள்.
    8 hours ago · Like · 1

    பதிலளிநீக்கு