ஜூலை 08, 2011

தமிழ்ப்புலமையின் குறியீடு நீ


ழத்து இலக்கிய வானின் விடிவெள்ளி நீ
தமிழ்ப் புலமையின் குறியீடு நீ
சொல்லின் வீச்சும்
அறிவின் துலக்கமும்
தமிழ் கூறும் உலகெங்கும்
உன்னை நினைக்க வைத்தது.

விமர்சன வீச்சினால் ஈழத்தமிழை
உலகெங்கும் எடுத்துச் சென்றாய் நீ
கணைகள் பெற்றாலும்
சளைக்காது தொடர்ந்தாய் நீ.

யாழ் பல்கலையில்
இறுதியாய்
உன் தமிழ்ப்புலமையின் கப்பிப்பால்
குடித்த பாலகர்களில் ஒருவனாய்
அன்று நானும்
உன் அருகில் இருந்தேன் ஐயா.
அதனால் இருவிழி நீருடன்
உலகெங்கும் பரந்த
உன் மாணவசீடர்களில்
ஒருவனாய் நின்று
அஞ்சலித்தேன் ஐயா!

ஈழத்து இலக்கிய வானின்
விடிவெள்ளியாய் என்றும் ஒளிர்வாய்
தமிழ்ப் புலமையின் குறியீடாய்
நீ இன்னும் வாழ்வாய்

-சு. குணேஸ்வரன் (துவாரகன்)

3 கருத்துகள்:

 1. விமர்சன வீச்சினால் ஈழத்தமிழை
  உலகெங்கும் எடுத்துச் சென்றாய் நீ
  கணைகள் பெற்றாலும்
  சளைக்காது தொடர்ந்தாய் நீ.

  பதிலளிநீக்கு
 2. இந்தப் பேராசிரியரிடம் கற்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை. இவர் எனது துரோணர். இறுதிக் காலத்தில் இவர் பல விடயங்களில் உறுதியான முடிவுகளை எடுக்கத் தயங்கியதை நாம் எல்லோரும் அறிவோம். எனினும் அவரின் அறிவுத்திறனை போற்றுவோம்.

  பதிலளிநீக்கு
 3. ரவிஅண்ணா, தாரணி வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு