டிசம்பர் 04, 2009

நானும் கொஞ்சம் குப்பை சேர்க்கிறேன்




-----துவாரகன்

இப்போ நானும் கொஞ்சம்
குப்பை சேர்க்கத் தொடங்கி விட்டேன்.
யார் யாரோ கொட்டி வைத்தவற்றையெல்லாம்
பத்திரமாகப் பொறுக்கி எடுத்துக் கொள்கிறேன்.

நந்தவனச் சோலைகளிலும்
பிரசங்க மேடைகளிலும்
திருவிழாக்களிலும்
நான் சேகரித்த குப்பைகளை
சட்டைப் பைகளுக்குள்
பத்திரப் படுத்திக் கொள்கிறேன்.

அவை என் புத்தகங்களையும்
படிக்கும் அறைகளையும் மீறி
சாமியறைகளிலும் நுழைந்து கொள்கின்றன

கொஞ்சம் கொஞ்சமாக குப்பைகளை
மூளையிலும் திணித்துக் கொள்கிறேன்.
தம்பி தங்கை அப்பா அம்மாவுக்கும்
இப்போ நான்தான் வழிகாட்டி

என் தாத்தாவின் மடியிலும் கொஞ்சம்
குப்பை கொட்டி
என் புத்திசாலித்தனத்தை நிரூபிக்கப் போகிறேன்

நானும் ஒரு புத்திசாலி
என் இளவல்களுக்கு வழிகாட்டி
மூளையில் குப்பை நிரப்பிக் கொண்ட
என் நண்பர்களைப் போலவே.
071120092311

7 கருத்துகள்:

  1. very fine poet. nallakaruthanna kavithai.kuppaikalai thenikkum poothu errkath anne vendum. vathiric. ravi

    பதிலளிநீக்கு
  2. தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
    துவாரகன்

    பதிலளிநீக்கு
  3. ezhimaiyana mozhi nadai arumai perumaiyana arivu saarntha vidayangal sekaripathatku kuppaikal poala kotti kidakinrathu avartil oru pangai neengal sekaritha maiyangalai koori irupathum antha arivu saar vidayangal engellam senru serukinrathu enpathai koori irupathum ungal kavikku kalaiyootukinrathu

    பதிலளிநீக்கு
  4. கவிதையை வாசித்து கருத்து எழுதிய ஐங்கரனுக்கு மிக்க நன்றி. அருமை பெருமையான விடங்கள் எங்கும்தான் நிறைந்திருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் வழிநடத்தவேண்டியவர்களே திசை மாறும்போது யாரைத்தான் நோவது?

    துவாரகன்

    பதிலளிநீக்கு
  5. துவாரகன் உன்னுடைய கவிதைகளும் ஓவியங்களும் என் மனதில் பதிந்துபோயுள்ளன.

    பதிலளிநீக்கு
  6. வல்லை வெளி வீதியால் நானும் பாஸ்கரன் என்ற நண்பனும் அடிக்கடி பயணம் செய்திருக்கிறோம். உனது முகப்பு படம் அதனை ஞாபகப்படுத்துகிறது.

    பதிலளிநீக்கு
  7. கவிஞர் இளையஅப்துல்லாவுக்கு நன்றி. வலைப்பதிவினூடாக தங்கள் தொடர்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. ஞாபகங்கள் என்றும் அழிக்க முடியாதவையல்லவா?

    அன்புடன்
    துவாரகன்

    பதிலளிநீக்கு