செப்டம்பர் 19, 2009

எங்கள் குழந்தைகள்


-----துவாரகன்

எங்கள் குழந்தைகள்
வீடுகளைத் தொலைத்து விட்டார்கள்
எங்கள் குழந்தைகள்
வீதிகளைத் தொலைத்து விட்டார்கள்
எங்கள் குழந்தைகள்
சிரிப்புகளைத் தொலைத்து விட்டார்கள்
இனியும்
அவற்றைத் தேடிக் கொள்வோம் என்ற நம்பிக்கை
எங்கள் கைகளை விட்டுத்
தூரப் போய்விட்டன.
படகோட்டி தன் துடுப்பைத் தொலைத்து விட்டதுபோல்

இப்போ எங்கள் குழந்தைகளுக்குத் தேவை
வானவில்லும் நட்சத்திரங்களும் அல்ல
நடந்த களைப்புத் தீர
ஒரு முள்ளில்லாப் பற்றை
தாகம் தீர்ப்பதற்குக்
கொஞ்சம் குடிதண்ணீர்

051020082250

2 கருத்துகள்:

 1. on facebook...

  Jeyakumar Antoni தொலைந்துவிட்ட எங்கள் குழந்தைகள் , தொலைத்துவிட்டவற்றைத் துலாம்பகரமாகத் தருகிறது கவிதை. சிரிப்பைக்கூடத் தொலைத்துவிட்ட கொடுமை அந்தச் சின்னஞ்சிறுசுகளுக்கு. யாருமற்ற அனாதைகளாகத் , தேடுவாரற்று , முளையிலே கருக்கப்பட்ட அந்தப் பசுந்தளிர்களுக்குத் தற்போதைக்குத் தேவை தலைசாய சிறுபற்றை, தாகத்துக்கு சிறிது தண்ணீர்........... சிறியதோர் ஓய்வுக்குப்பின் , உயிர்வாழ்வைத்தேடி மீண்டும் அலைச்சல் ................... வல்லூறுகளிடையே கோழிக்குஞ்சுகளாக , எமது குஞ்சுகள். நிஜங்களைத் தத்ரூபமாக்குகிறது கவிதை. தோற்றுவிட்டோம் நாமெல்லோரும், எங்கள் குழந்தைகளைத்தேடி. ஆனாலும் நாம் தொலையக்கூடாது . ஏனெனில் அந்த சிறுசுகளின் நம்பிக்கை நாங்கள்தான். “தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும் தர்மம் மறுபடி வெல்லும் ” , நம்புவோம். நிஜத்தை நிஜமாகக் காட்டியமைக்கு வாழ்த்துகள்.
  Yesterday at 05:56 · Like

  பதிலளிநீக்கு
 2. thanks _vaarppu.com

  வாசகர்களின் கருத்துக்கள்
  பெயர்
  கந்தையா சோதிதாஸ் நாடு Sri Lanka
  தளம்
  திகதி 2011-10-24
  [1]
  படகோட்டி தன் துடுப்பைத் தொலைத்து விட்டதுபோல் -அழகான உவமை தமிழர் எதிர்காலம் இப்படித்தான் இருக்கிறது.யதார்த்தம் கவிதையை காவியம்ஈக்கிஇருக்கிறது வாழ்த்துக்கள்.
  -வேலணையூர்தாஸ்.

  பதிலளிநீக்கு